பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 A மகளிர் வளர்த்த தமிழ் தமிழகம் பெற்ற ஒப்பற்ற பெண்டிர், இலக்கியம் மறக்க முடியாத இவ்வொரு தூதுவர், பாடலால் இவ்வனைத்தையும் செய்துவிட்டார். * - 4. வீரம் பாடிய மகளிர் சங்கப் பாடல்கள் என வழங்கப் பெறுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுமாம். பத்துப்பாட்டு என்னும் நூலுள், மிகவும் நீண்ட பாடல்களாகத் திருமுருகாற்றுப்படை முதலாக, மலைபடு கடாம் ஈறாகப் பத்துப் பாடல்கள் உள்ளன. சிறிய அளவுடைய உதிரியான பாடல்களை, ஒர் இனம் பற்றித் தொகுத்த தொகுப்புக் களே எட்டுத்தொகை எனப்பெறும். புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை முதலிய எட்டு நூல்கள் இப்பெயர் பெற்றன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற இத்தொகுப்புக் களில் பாடிய புலவர்கள் மொத்தம் 473 பேர். இவற்றை யல்லாமல் 102 பாடல்கட்கு ஆசிரியர் பெயர் காணப்பட வில்லை. - х . . . . பெயர் தெரியும் 473 புலவர்களுள், 30 பேர் பெண் பாற்புலவர். அனைவரும் பாடிய சிறியவும் பெரியவுமான பாடல்கள் 2381 இத்தொகையுள் முப்பது மகளிரும் பாடிய 190 பாடல்களும் அடங்கும். இம்முப்பது மகளிருள் ஒளவையாரே மிகுதியும் பாடியவர். அவர் பாடிய 59 பாடல்கள் எதிரே ஒரே ஒரு பாடல் பாடிய 16 மகளிரும் உள்ளனர். ஒரே ஒரு பாடல் பாடியதன் மூலம் கால வெள்ள த் தி ல் அடித்துக்கொண்டு போகப்படாமல் நிலைத்துவிட்டனர் இப்பதினாறு பெண்பாற்புலவரும். அளவால் ஒரு பாடலாய் இருக்கலாம்; ஆனால், சிறப்பால் கணக்கிடும் பொழுது, இப்பாடல்கள் மதிப்பிட முடியாத, பெருமை உடையனவாகின்றன. -