பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 21 இம்மகளிருள் பலரும் வீரத்தைப் புகழ்ந்து பாடி யுள்ளனர். ஆடவர், வீரத்தைப் பாடுவதற்கும், இப் பெண்டிர் பாடுவதற்கும் ஒரு வேற்றுமையைக் காணலாம். இவர்கள் பாடிய பாடல்களில் பெண்கள் என்ற முத்திரை பளிச்சிட்டுத் தோன்றும். வீரம் என்றவுடன் வில்லும் வேலும் வாளும் தாங்கிப் போர்க்களம் புகுந்து, பகைவரை வெட்டிச் சாய்க்கின்ற மன நிலைதான் நம் நினைவிற்கு வருகின்றது. இதுவும் வீரந்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால்: இத்தகைய வீரரை உண்டாக்குபவர்களின் மேல் நம் கவனம் செல்வதில்லை. ஆம் ! கண்ணெதிரே காண்பதை மட்டும் நினைவிற்கொண்டு புகழ்வதும், காணப்படாமல் மறைந்து நிற்கும் வேரை மறந்து போவதும் உலகியற்கை தான். ஆனால், பழம் பழுக்கும் மரத்தைப் பார்க்கும் ஒரு சிலர் மட்டும் அம்மரத்தின் சிறப்பைப் புகழ்வதோடு அமைவதில்லை ; மரத்தின் சிறப்புக்குக் காரணமான வேரையும் நினைவுகூர்ந்து சிறப்புச் செய்வர். அதே போலப் போர்க் களத்தில் வீரம் காட்டும் வீரரை மட்டுமே புகழும் இவ்வுலகில், அவ்வீரரின் மூல காரணத்தை அறிந்து புகழும் சிலரும் இல்லாமல் இல்லை. உரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி (Decline and Fall of the Roman Empire) grgüt D gih @LGARIrgúláb egy ö நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணங்களை ஆய்கிறார் எட்வர்டு கிப்பன் என்ற அதன் ஆசிரியர். மிகப்பெரிய காரணங்களுள் ஒன்றாகப் பெண்களின் மன மாறு பாட்டைக் கூறுகிறார். முன்னர் உரோமாபுரிப் பெண் டிர், எப்பொழுதும் வீரரையே தியானித்துக்கொண்டு வீர வழிபாடு செய்வாராயினர். தம்முடைய படுக்கை அறை களிலும் வீரர்களுடைய படங்களையே வைத்துக்கொண்டு, உறங்கு முன்னரும் விழித்த பின்னரும் அப்படங்களையே பார்த்து வரலாயினர். ஆதலின், எப்பொழுதும் வீரர்கள் பற்றிய வரலாறுகளே அவர்கள் மனத்தில் நிறைந்