பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 A மகளிர் வளர்த்த தமிழ் திருந்தன. அவ்வாறு உள்ள வரை உரோம நாட்டில் பெருவீரர்கள் பி ற ந் த ா ர் கள். நாளாவட்டத்தில் இந்நிலை மாறியது. குடியிலும் களியாட்டத்திலும் அப்பெண்கள் மனத்தைச் செலுத்தி, இன்ப வேட்டையில் இறங்கினார்கள். அந்நிலைமை வந்தவுடன் வீரர்கள் தோன்றுவது அருகிப் போயிற்று ' என அவர் கூறுவது, தமிழ் நாட்டைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மையா யிருந்தது. சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள், உடல் வீரமும் மன வீரமும் ஒருங்கே படைத்தவர்களாய் இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் தோன்ற வேண்டுமாயின், அதற்குரிய காரணம் யாதாக இருத்தல் கூடும் ? அவ்வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும் வீரம் மிக்கவர்களாயிருந் திருத்தல் வேண்டும். இவ்வுண்மையைப் பலரும் அறிந் திருந்தனர். எனினும், சமயம் நேரும் பொழுது ஒரு சிலர் மட்டும் வீரர்களைப் புகழ்வதோடன்றி, அத்தாய்மார் களையும் புகழ்ந்து கூறினர். வீரரைப் பெற்றெடுத்த வீரம் மிக்க பெண் மக்களை, மூதில் மகளிர் என்று வழங்கினர். மூதில் மகளிர் என்ற சொல் தொடருக்குப் பழைய வீரக் (மறக்) குடியில் பிறந்த பெண்டிர் என்பது பொருளாகும். மறக்குடியை மூதில் என்பது பழைய மரபு. மூதில் என்பதற்குப் பழைய குடி என்பது பொருள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தேகூட, வாளோடு முன் தோன்றி மூத்த குடியினர் ஆகலின், இக்குடியினைப் பழைய குடி (மூதில்) எனக் கூறினர். வீரர்களைப் பாடிய பாடல்களின் இடையே, வீரர் களைப் பெற்ற தாய்மார்களை நினைந்து பாடிய பாடல் களும் உண்டு என்று கூறினோம். யார் அவ்வாறு நினைந்து கூறிய பெருமக்கள் என்று கேட்கத் தோன்று கிறதா ? வேறு யாராக இருத்தல் கூடும் ? அவர்களும் பெண்களே !