பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க. ஞானசம்பந்தன் A 23 காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்பவர் ஒரு பெண்பாற்புலவர். நச்செள்ளையார் என்பதே அவரது இயற்பெயர். அவரது அருமையான பாடல் ஒன்றில் காக்கையைப் பற்றிப் பாடினது காரணமாகக் க்ர்க்கை பாடினியார் என வழங்கப்பட்டார் என்பது தெரிகிறது. பொருள் தேட வெளியூர் சென்ற தலைவன், நீண்ட காலம் வாராமல் இருந்தான். தலைவி பெரிதும் வருந்து வாளாயினாள் ; தினமும் வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் அவள் வீட்டு முற்றத்தில் காக்கையொன்று ஓயாமல் கரைந்தது. 'காக்கை கரைந்தால் விருந்து வரும், என்று கூறுவர். அதே போல, அன்று தலைவன் மீண்டுவிட்டான். எனவே, அவன் வரவை முன் கூட்டி அறிவித்த காக்கைக்கு விருந்து செய்ய வேண்டும் என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியதாக அமைந்துள்ளது பாடல். ஊரில் உள்ள மாடுகள் அனைத்தும் கறந்த பாவில் நெய் எடுத்து, அந்நெய்யில் தொண்டி என்ற ஊரில் விளைந்த அவ்வளவு அரிசியையும் சோறாக்கி, இக்காக்கைக்கு இட்டாலும் போதாது !' என்ற பொருளில் பாடல் அமைந்துள்ளது. 'திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லாப் பயந்த நெய்யில் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிதுஎன் தோழி ! பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே." 1 (குறுந் 210) இவ்வழகிய பாடலில் காக்கையைப் பாடியமையின், அவர் காக்கை பாடினியார் எனக் கூறப்பட்டார். இத்தகைய பெருமாட்டியாரே வீரக் குடியிற் பிறந்த பெண் ஒருத்தியைப் பற்றிப் பாடியுள்ளார். முன்னர்க் கூறப்பட்ட மறக்குடிப் பிறந்த கிழவி ஒருத்தி. அவள் உடம்பு, வயது காரணமாக இளைத்