பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 A மகளிர் வளர்த்த தமிழ் துள்ளது. நரம்புகள் தடித்து மேலெழுந்து காணப்படு கின்றன. தோள்கள் தளர்ந்துள்ளன. அவள் முட்செடி போன்றுள்ள இடையினையுடையாள். அ. த் த ைக ய கிழவிக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். ஆம் இருந்தான்' என்றுதான் கூற வேண்டும். இப்பொழுது அவன் போருக்குச் சென்று இறந்து விட்டான். போர்க்களத் திலிருந்து மீண்ட சிலர், கிழவியிடம் பேசினர். சரியாக அறிய மாட்டாத அவர்கள், அவளுடைய மைந்தன் தன் முதுகில் புண்பட்டு இறந்தான் என்று கூறிவிட்டார்கள். தன் மகன் முதுகில் புண்பட்டான் என்றால், போரில் புறங்காட்டி ஒடினான் என்பதுதானே பொருள் ? வீரக் குடியிற் பிறந்த கிழவிக்குத் தன் மகன் செய்த இந்த இழிந்த செயல் பொறுக்கக் கூடியதா ? உடனே சீறி எழுந்தாள். என்ன கூறி விட்டுச் சென்றாள், தெரியுமா ? என் மகன் உண்மையில் புறமுதுகிற் புண்பட்டு இறந்திருப்பின், அவ னுக்குப் பால் கொடுத்த என் மார்பை அறுத்து விடுகிறேன் ! என்று சபதம் செய்து புறப்பட்டாள். போர்க்களத்தில் கிடந்த உடல்களை எல்லாம் புரட்டி னாள்; தன் மகன் உடலத்தைக் கண்டாள். என்ன புதுமை! அவன் மார்பில் பட்ட காயத்துடன் இறந்து கிடந்தான். அவ்வீரத் தாய், அது கண்டு மகிழ்ந்தாளாம். எவ்வாறு ? பெற்ற பொழுதைக் காட்டிலும் அதிகம் மகிழ்ந்தாளாம். 'நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற, 'மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலை.அறுத் திடுவன் யான் !’ எனச் சினை இக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணுTஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தேைள !’ (புறம். 278)