பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 25 (படை அழிந்து மாறினன் - முதுகு காட்டி ஒடி இறந் தான், சினை.இ. கோபித்து, படுபிணம் பெயரா- இறந்த உடல்களைப் புரட்டி, செங்களம் துழவுவோள்- போர்க் களத்தில் தேடுபவள்.) இனி ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மற்றொரு மறக்குடி மகள் பற்றிப்பாடுகிறார். இப்பெண்ணின் தைரியம் மிகவும் கடுமையானது இவளே மறக்குடியிற் பிறந்தவள் என்று கூறத் தக்கவள். அன்றொரு நாள் நடைபெற்ற போருக்குச் சென்ற இவள் அண்ணன், யானையைக் கொன்று தானும் இறந்தான். நேற்றைப் போரில் இவள் கணவன், பெரிய படையொன் றைத் தடுத்து நிறுத்தித் தானும் இறந்தான். இன்றும் பார்ப் பறை கேட்டது. ஒரே இளைய மகனை உடையவள் இவள். கணவன் இறந்துவிட்டமையின், இனி இவளுக்கு வாழ்வே இல்லை. எனினும், அந்த மகனை அழைத்து, வெள்ளிய உடை ஒன்றை விரித்து உடுத்தி னாள் ; அவன் பறட்டைத் தலையை எண்ண்ெய் தடவிச் சீவினாள் ; அவன் கையில் வேலைக் கொடுத்துப் போர்க் களம்செல்க !’ என அனுப்பிவிட்டாள், என்ற பொருளில் அமைந்துள்ளது பாடல். > * 'கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே ! மூதில் மகளிர் ஆதல் தகுமே ! மேனாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ யானை எறிந்து களத்தொழிந் தனனே ! . நெருநல் உற்ற செருவிற்குஇவள் கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே ! இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள், "செருமுகம் நோக்கிச் செல்க !' என விடுமே ! (புறம். 279)