பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 A மகளிர் வளர்த்த தமிழ் இப்பாடல்கள் மகளிராற் பாடப்பட்டவைகளே. இத்தகைய பாடல்கள் புறநானூற்றில் உண்டு. பிற பெண்களின் வீரம் பற்றிய பாடல்கள் தாம் இவை. எனினும், இப்பாடல்களின் அடித்தளத்தில் காணப்பெறும் ஆழ்ந்த அவலச் சுவையை (சோக ரசத்தை) யாரும் அறியா மற்போக முடியாது. வீரத்தையும் வீர மகளிரையும் புகழும் பாடல்களாயினும், போரால் விளையும் மாற் றொனாத் துயரத்தை இப்பாடல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. மகனை இழந்து வருந்தும் ஒரு தாயின் துயரத்தை மற்றொரு பெண்தான் அறிய முடியுமே தவிர: ஆண் மகன் அறிவதும் கடினம் : அறிந்தாலும், அதனை உணர்ச்சி மிக்க கவிதையில் வடிப்பது அதைவிடக் கடினம். முதற்பாடலின் கடைசி அடியை மற்றொரு முறை படித்துப் பாருங்கள். 'பெற்றநாளைக் காட்டிலும் பெரு மகிழ்ச்சியடைந்தாள், என்ற அடியில் வரும் சொல் 'உவந்தனள்' என்பதுதான். ஆனால், அச்சொல் கதறி யழுதாள் என்ற குறிப்பைத் தருவது போலுள்ளது. இரண் டாம் பாடலின் இன்றும் என்ற சொல்லில் உள்ள உம்' மைக் கவனியுங்கள். அன்றியும், ஒரு மகன் அல்லது இல் லோள்" என்பதில் தொனிக்கும் அவலச் சுவையை உணர்ந்து பார்த்தால் உண்மை விளங்கும் ! 5. கடமை பாடிய மகளிர் உலகில் மனிதன் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தே கூட்டம் கூடி வாழக் கற்றுக் கொண்டான். தனி மனிதனாய் வாழ்ந்த பொழுது இல்லாத பல கடமைகள் இப்போது தோன்றலாயின. கடமை என்பது யாது? செய்து தீரவேண்டிய இன்றியமையாமை உடைய செயலே. கடம்ை என்ற பெயரினுள் அடங்கும். சமுதாயமாக