பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 27" மனிதன் வாழத் தொடங்கியவுடன், தன் கடமைகள் பல்கிவிட்டதைக் கண்டான். இக்கடமைகளுள் பல அவனுடைய நலத்தைக் குறைப்பனவாகவே இருந்தன. தனி மனிதனாய் வாழ்ந்த பொழுது இருந்த உரிமை சமுதாய வாழ்வில் அடிபட்டுப் போயிற்று. சமுதாய வாழ்வில் பலர் ஒன்று கூடி வாழும் வாழ்வில் இன்பம் இருந்தது உண்மைதான். ஆனால், அந்த இன்பத்தைப் பெற அவன் கொடுக்க வேண்டிய விலையும் பெரிதாகவே இருந்தது. சமுதாய வாழ்வில் பெற்ற இன்பம், பாதுகாவல் என்ற இரண்டிற்கும் தனி மனிதன் தந்த விலை யாது ' அவன் உரிமைகளைப் பறி கொடுத்ததே அதன் விலை என்று கூறலாம். பிறந்த அனைவருக்கும் வாழ உரிமையுண்டு. இறை: வனால் படைக்கப்பட்ட உயிர்கள் எவ்வளவு காலம் வாழ உரிமையுண்டோ, அவ்வளவு காலம் வாழ்ந்து காலம் வரும் போது இறத்தல்தான் முறை. வாழும் காலத்து யாரும் சாவை விரும்பி ஏற்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. இடையில் ஒரு வேளை இறக்க நேர்ந்தால் அதனைக் கூடுமான வரை தடை செய்ய முயல்வதிலும் தவறில்லை அவ்வாறு இருக்க, ஒருவன் போர்க்குப் புறப் படுவது எவ்வாறு ? போர் என்று கூறினால் சாவும் உடன் வருவதுதானே ? போருக்குப் போய் மீண்டும் உயிருடன் வருவோம் என்ற உறுதி இல்லையே ! அவ்வாறாயின், பலர் போர் என்றவுடன் மார் தட்டி எழுவதன் காரணம் யாது ? இந்தக் காரணத்தை அறியச் சில அடிப்படைகள் அறியப்பட வேண்டும். போர் ஏன் நிகழ்கிறது ? ஒருவன் தன் நாட்டின்மேல் படை எடுத்து வரும்போது, நாட். டைக் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அன்றேல், தன்னுடைய மன்னவன் பிற நாட்டின்மேல் படை.