பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 A மகளிர் வளர்த்த தமிழ் கொண்டு செல்லும் போது அவனுடன் செல்ல வேண்டி .யுள்ளது. இவ்விரு நிலைமையிலும் வீரனுக்குப் போர் .புரிய வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது. சுருங்கக் கூறின், இதனையே கடமை என்று குறிப்பிடு கிறோம். போர் புரிவது வீரன் கடமை. இக்கடமை நிறைவேற்றத்தில் அவனுடைய அரிய உயிரை இழக்க நேரிட்டாலும் நேரிடலாம். அதை நன்கு அறிந்தே அவன் தன் கடமையைச் செய்யச் செல்கிறான். இது போலவே பிற கடமைகளையும் மனிதன் மேற்கொள்ளுகிறான். சமுதாய வாழ்வு பெருகப் பெருக மனிதனுடைய கடமைகளும் விரிந்துகொண்டே செல்கின்றன தனி மனிதன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக் கொடுக்க நேரிடுகிறது. கடமையின் சிறப்பையும், சமுதாய வாழ்விற்கு அது எத்துணை இன்றியமையாதது என்பதையும் கண்டோம். இக்கடமைபற்றிப் பழங்காலப் பெண்மணி ஒருத்தி பாடும் பாடலைக் கண்டோம். தாய், தந்தை, தொழிலாளி, மன்னன், தனி மனிதன் அன்னவருக்கும் ஒரே பாடலில் கடமைகள் வகுக்கிறார் அம்மாதரசி. ஒருவன் இளங்குழந்தையாய்ப் பிறந்து வளர்கின்ற பொழுது எத்துணைப் பேருடைய உதவி தேவையாகிறது! குழந்தைப் பேறு இன்பம் பயப்பதாயினும், அதற்கு ஒரு தாய் படும் பாட்டை நினைக்கும் பொழுது கல் ந்ெஞ்சமும் கரையத்தான் செய்கிறது. t மூன்று புவனத்து உள்ள பொருள் முற்றும் கொடுத்து முறை முறையே என்ற வழிபாடு இயற்றிடினும் ஒருநாள் வளர்த் தற்கு இயையாவே என வேதநாயகம் பிள்ளை பாடிச் சென் றார். தாய் தன்னுடைய உயிரைப் பணையம் வைத்துத் தானே குழந்தையைப் பெறுகிறாள் பெற்ற அன்று தொடங்கிய துன்பம் அவன் பெரியவனாகிறவரை தொடர்