பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 29" கிறது. சுவைப் பொருளைக் கண்டால், தான் உண்ணாமல் குழந்தைக்கு என்று எடுத்து வைப்பவள் தாய்தான். மாம்பழம் முதலிய பொருள்கள் எத்துணைச் சுவை யுடையன அவற்றை உண்டால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளா என்பதற்காகவே, தாய் அவற்றை உண்ட தில்லையன்றோ ? குழந்தை பெறுதலும் வளர்த்தலும் தனது கடமை என்பதற்காக, அத்தாய் எத்துணைத் துாரம் தன் நலத்தை விட்டுத் தருகிறாள் இது கருதியேதான் இறைவனைக்கூட அடியார் தாய் என்றே போற்றினர். அம்மையே ! அப்பா ! ஒப்பிலா மணியே என்றும், தாதாய் ! மூவேழ் உலகுக்கும் தாயே t' என்றும் திருவாசகம் பேசு கிறது. - - எனவே, தாயின் கடமைகளைப் பேச வந்த அத்தாய்ப் புலவர், பெற்று வளர்ப்பது என்னுடைய கடனாகும்." என்ற பொருளில், ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே என்று கூறினார். தம் கடமையைக் கூறிய புலவருக்குத் தந்தையின் நினைவு வருகிறது. ஆம் பெற்று வளர்த்து விட்டால் மட்டும் போதுமா ? தாம் பெற்று வளர்த்த பிள்ளை பிறரால் மனிதன்' என்று மதிக்கப்பட வே: டாமா ? எத்துணைச் சிறந்த அறிவுடைய தாயானாலும். மகனைச் சான்றோன் ஆக்க இயலாது. அவளுடைய தாயன்பு குறுக்கே நின்று, அவன் பிழைகளை அவள் காணாதவாறு செய்துவிடும். எனவே, மகனைக் கண்டித்து வளர்க்கும் பொறுப் பைத் தந்தையிடம் விட்டுவிடுகிறார் அத்தாய்ப் புலவர். பாடலின் இரண்டாம் அடியில், சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்று கூறும் பொழுது, கடமை உணர்ச்சி அப்பெண்பாற்புலவரிடம் எவ்வளவு இருந்த தென்பதை நன்கு அறிய முடிகிறது. சான்றோன் என்ற ஒரே சொல்லில் எத்துணைப் பொருட்சிறப்பை வைக் கிறார் புலவர் ! மனிதனாய்ப் பிறந்தவன் மகாத்து மாவும் ஆகலாம் : துராத்துமாவும் ஆகலாம். மகாத்து