பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 A மகளிர் வளர்த்த தமிழ் மாவாகும் பொழுது உலகம் அவனைச் சான்றோன் என வழங்குகிறது. சான்றாண்மை என்ற பெருங்குணத்தை வள்ளுவர் இதோ குறிக்கிறார் : பல நற்குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மையே சான்றாண்மை எனப்படும். அப்பல குணங்கள் யாவை ? அன்புடைமை, பழிபாவங்கட்கு நாணுதல், பிறரிடத்துப் பரிவு காட்டல் (கண்ணோட்டம்), வாய்மை, ஒப்புரவு என ஐந்தும் சால் .புடைமை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்களாம். அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய் மயொடு ஐந்துசால்பு ஊன்றிய துண்.: (குறள், 984) என்ற குறளாலும், பிறர் தீமை சொல்லாமை (984), தாழ்ந்தவரிடங்கூடத் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல் .(986), தீமை செய்தவர்க்கும் நன்மையே புரிதல் (987) முதலியவற்றாலும் சான்றாண்மை விளக்கப்படுகிறது. குறள் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து நம் நாட்டில் ஒரு சான்றோர் நம் காலத்தில்.வாழ்ந்தார். சான்றாருக்கு இவ்வுலகம் தகுதி இல்லை என்று அவரைக் குண்டுக்கு இரையாக்கிய புண்ணியம் நம்மைச் சாரும். இத்தகைய பண்புகளை ஒருவன் பெற்றால்தான் சான்றோன் எனப்படுவான். அப்பண்புகளை அவன் பெற உதவுவது தந்தையின் கடமை என்கிறார் தமிழ் மூதாட்டியார். - - இத்துணைப் பண்பாடுகளுடன் வளரும் மைந்தன், கடமைகளைச் செய்ய உதவுவது சமுதாயம். அவனுக்கு ஏற்ற தொழிலைத் தந்து அதனால் பயன் அடைய வேண்டுவது சமுதாயத்தின் கடமை. இதனை அப்புலவர் வேறுவழியிற்-கூறுகிறார். மைந்தனுக்கு வேலாயுதத்தைச் செய்து கொடுத்தல் கொல்லன் கடமை என்கிறார். ! . 'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் ఉLGa'