பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 P . ஞானசம்பத்தன் Δغ .Iھی என்ற அடியில், வேல் என்பது சமுதாயத்தில் அவன் மேற்கொண்ட பணிக்கு ஏ ற் ற கருவியைக் குறிக்கும் சொல்லாய் அமைந்துள்ளது. சிறந்த மருத்துவனாக அமையக்கூடிய தகுதியும், சிறந்த பொறி வல்லுநனாக (இஞ்சினியர்) அமையக்கூடிய தகுதியும் இயற்கையில் சிலருக்கு அமைகின்றன. ஆனால், வாழ்க்கையில் வசதி இன்மையால் அவர்கள் அத்துறையில் முன்னேற முடிவதில்லை. அவ்வசதியைச் செய்து தர வேண்டுவது யாருடைய கடமை ? பிறப்பில் விஞ்ஞானி யாகிய சர்.சி.வி. இராமனுக்கும், கவிஞனாகிய பாரதிக்கும் வாய்ப்புடைய சோதனைச் சாலையும், சிறந்த பத்திரிகை யும் இல்லை என்றால், குறை யாருடையது ? சமுதாயத் தினுடையது தான் ! வேண்டிய கருவிகளை வாங்க இயலா டில் இராமனும், பாடினதை அச்சடிக்க இயலாமல் பாரதி யும் இருந்தால், இந்தச் சமுதாயத்தை என்ன செய்யலாம் வாய் கூசுகிறது. மேற்கொண்டு சொல்ல கொல்லன் என்று பாடலில் வருஞ்சொல் சமுதாயத்தையும் வேல்' என்று வருவது சமுதாயம் உதவும் கருவிகளையும் குறித்து நிற்கின்றன. - t சமுதாயத்தைக் கொல்லன்' என்ற சொல்லாற் கூறிய கவிஞர் அடுத்த அடியில், 'நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே' என்கிறார். சாப்பாட்டுக்குக் கவலை இல்லாமல் நல்ல நிலங்களைத் தருதல் மன்னன் கடமை என்பது இவ்வடி யின் நேரான பொருள். அவன் மேற்கொண்ட தொழிலை முட்டின்றி முடிக்க உதவுவது அரசு. இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரு தவற்றை அரசியலார் செய்து வருகின்றனர். அவரவர் சக்தி அறிந்து பயன் படுத்தாமல், தவறான வேலை தந்து அவர்களால் பெறும் முழுப்பயனை அடைய முடியாமற்போனதுதான்