பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 A மகளிர் வளர்த்த தமிழ் அந்தக் கதை. பைரன் போன்ற சிறந்த கவிஞர் போர்க் களத்தில் உயிரை விட நேர்ந்தது எதனால் ? பாரதி பட்டினியால் வாடி உயிரை விட்டது எதனால் ? தொல் காப்பியம் பதிப்பிக்கவல்ல வ. உ. சிதம்பரனார் செக் கிழுத்தது எதனால் ? அரசியலாரது தவற்றால். இவ்வாறு செய்யாமல், அவர்களால் பெறும் பயனை அடைய வேண்டும் என்பதைத்தான் இவ்வடி குறிப்பிட்டது. இத்துணைப் பேர்களும் தங்கள் கடமைகளைச் சரி வரச் செய்தால், தனி மனிதன் தன் கடமையைச் சரிவரச் செய்வான். அவன் கடமை என்று பாடல் குறிப்பது, ஒளி பொருந்திய வாளை வீசி, யானையை வென்று மீளுதல் என்றதையாம். போர் செய்தல் என்பது இவ்வடி யின் பொருளானாலும், எல்லாக் கடமைகளையும் சிறந்த முறையில் முடிப்பதை இது கூறுவதாகக் கொள்ளலாம். இதோ பொன் முடியார் என்ற பெண்பாற் புலவர் பாடிய பாடல் : 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே ! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !! (நன்னடை- நல்ல விளைநிலம்). (புறம் : 312). மகளிர் பாடிய பாடல்களுள் எல்லாம் தலையாய பாடல் இது. அது தெரிந்துதான் போலும் இவ்வம்மை யார்க்குப் பொன்முடியார் என்று பெயர் வைத். தார்கள் !