பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. துறவு பாடிய மகளிர் சோழ நாட்டில் வளஞ்செறிந்த ஒருரில், வான் பொய்ப்பினும் தான் பொய்யாமல் மலையிலிருந்து புறப் பட்ட காவிரி பல கால்வாய்களாய் ஒடிப் பொன் விளையச் செய்தது. இத்தகைய வளமிக்க நாட்டில் பல நிலங்கட்குத் தலைவன் ஒருவன். குறுநில மன்னன் என்றுகூடக் கூறலாம் அவனை. அவனுடைய நிலங்கள் வேலி ஆயிரங் கலம் விளைந்து பயன் தந்தன. இத்துணைச் செல்வம் உடைய னாயினும், அப்பெருமகன் வாழ்வின் பயனை நன்கு அறிந்தவன். அவனுடைய குடும்பமும் மிகப் பெரியது. அனைத்து வகையாலும் செழிப்புடன் வாழ்ந்த அவன் இம்மை உலகத்தில் இசையோடு வாழ முற்பட்டான். முன்பின் தெரியாத ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் விரும்புவதும், அதற்கெனத் தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க முன் வருவதும் எதனால் ? காதல் என்ற ஒரு பிணிப்பால் அன்றோ ! அந்தப் பிணிப்பு ஏற்பட்ட உடனே ஒருவனுடைய தன்னலம் ஒரளவுக்கு விடுபடுகிறது" தன்னால் காதலிக்கப் பெற்றவள் பொருட்டு, ஒரளவு 'தன்னலத்தைத் துறக்கப் பழகுகின்ற மனிதன், குடும்பம் என்ற ஒன்று வைத்து வாழத் தொடங்குகிறான். அதில் ஏற்படும் மகப்பேறு முதலியன அவனுடைய அன்பை விரிவுபடுத்தித் தன்னலத்தை இன்னுஞ் சிறிது துறக்கச் செய்கின்றன. விருந்தினர், சுற்றத்தார் என்பவர் புகுந்து, மேலும் அவனுடைய மனத்தை விரிவடையச் செய்கின்ற னர். இதுவே இல்லறத்தின் தலையாய பயனாகும். . எவ்வளவு சிறந்த முறையில் இல்லறம் அமைந்து விடினும், இந்த அளவுக்குமேல் அவனுடைய மனம் விரி வடைவதில்லை. அதாவது, தன் மனைவி, மக்கள், சுற்றத் தார், விருந்தினர் என்ற அளவுக்கே மனம் விரிவடைகிறது. மகளிர்-3