பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 A மகளிர் வளர்த்த தமிழ் அதாவது, தொடர்புடையார் மாட்டு மனம் விரிவடை கிறது. சற்றும் தொடர்பில்லாதவர் மாட்டும் அன்பு பெரு கும் பொழுதுதான் அது "அருள்' என்னும் பெயரைப் பெறுகிறது. இவ்வருளை மனிதன் அடையும் போழுது தான் மனிதனாய்ப் பிறந்ததன் பயனை முழுவதும் பெறு கிறான். இல்லறத்தில் தொடங்கும் அன்பே முடிவில் அருளாய்ப் பரிணமிக்கிறது. அன்பும் அருளும் வளர ஏது வாய் இல்லற வாழ்வில் நல்முறையில் வாழ்ந்தார் சோழ நாட்டு நிலக்கிழார். எத்துணை நாட்களுக்குத்தான் இல்வாழ்வில் இருப் பது ? இதுவரை அமைதியோடிருந்த அவருடைய மனம் அமைதியை மெல்ல இழக்கத் தொடங்கியது. பல நாள் தம்முடைய அமைதியின்மைக்குக் காரணம் யாது என ஆய்ந்து பார்த்தார்; இவ்வாழ்வு உவர்ப்பதை மெள்ள அறிந்தார்; தம் மனம் அமைதியை இழக்கக் காரணம், தம் முடைய பொறிபுலன்கள் அடக்காமையே என்பதைக் கண்டார்; பொறி புலன்கள் அடங்கினாலன்றி, மனம் அடங்க வழி இல்லை என்பதைக் கண்டார். பொருள் களை விட்டு நீங்கிச் செல்லுதலே சிறந்த வழியாகும். சோழ நாட்டுச் செல்வரும் இவ்வாறு செய்யத் துணிந்துவிட்டார்; தம்முடைய பெருஞ்செல்வத்தை விட்டு விட்டுக் காடு நோக்கிச் சென்று தவஞ்செய்ய முடிவு செய்துவிட்டார். - 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்' வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.' (குறள், 341, 42) என்பவை குறளாசிரியர் கட்டளை அல்லவா ? ஒவ்வொரு பொருளாக ஒருவன் துறந்தாலும் அதனால் வருந்துன்பத் தினின்று விடுதலையடைவான் என்பதும், துறந்த பிறகு பெரிய இன்பங்கள் வருமாகலான் அவை வேண்டுமாயின்