பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 35 இப்பொழுதே துறவை மேற்கொள்க என்பதும் இப்பாக் களின் பொருள். எனவே, செல்வர் துறவு மேற்கொண்டு காடு செல்ல முடிவு செய்ததில் தவறு ஒன்றும் இல்லை. பல ஏவலாளர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு வாழ்ந்தவர் அவர்; தாமாக எந்த வேலையையும் செய்தது இல்லை; தம்முடைய சொந்த அலுவல்களுக்குக் கூடப் பிறரை ஏவுவதில் இன்பங் கண்டு வாழ்ந்தவர்தாம். ஆனால், காடு சென்ற பிறகு வாழ்வில் எத்தகைய பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன : அச்செல்வர் நாட்டில் நலத்துடன் வாழுங் காலத்தில் மாரிப்பித்தியார் என்ற பெண் பாற்புலவர் அவருக்கு நண்பராய் அமைந்திருந்தார். இச் செல்வரும் அப்புல்வரும் ஏறத்தாழச் சம வயதுடைய வர்கள். செல்வர் தம் இளமைக் காலந்தொட்டே புலவரை நன்கு அறிவார். அடிக்கடி செல்வராகிய நண்பரைச் சென்று பார்த்து வருவார், மாரிப்பித்தியார் என்ற அப்புலவரும். - அவ்வளவு நெருங்கிப் பழகிய செல்வராகிய நண்பர், துறவு மேற்கொண்டு காடு சென்று சில ஆண்டுகளாகி விட்டன. திடீரென ஒரு நாள் புலவர் தம்முடைய நண்பரை நினைத்துக்கொண்டார். அவரைச் சென்று காண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. ஆனால், புலவரோ, பெண்பாலார். எனவே, காட்டில் தனித்துச் செல்லுதல் தகவுடையதாகவும் படவில்லை. என்ன செய்வார் ! நண்பர் சிலர்க்குத் தம் மனக்கருத்தைத் தெரிவித்தார். துறவியாரைச் சென்று காண அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டனர். ஆடவர் பலருடைய துணையுடன் மாரிப்பித்தியார் என்ற அவ்வம்மையார் காடு நோக்கிப் புறப்பட்டார். காட்டில் நீண்ட தூரம் சென்ற பிறகு ஒரு துறவியாரை எதிர்ப்பட்டார்கள். .