பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 A மகளிர் வளர்த்த தமிழ் அத்துறவியாரது தல்ை தில்லந்தளிர் போ ல ச் செம்பட்டை நிறத்துடன் சடை பிடித்துக் கிடந்தது. காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும் ஒலி யுடன் கீழே வீழ்ந்து கொண்டிருக்கும் அருவியில் அத் துறவியார் தவறாமல் நீராடுகிறார். மூன்று வேளையும் நீராடுவதால் அத்தலைமயிர் காயாமல் இருப்பதுடன், நாளாவட்டத்தில் அதன் பழைய நிறமும் கெட்டுவிட்டது. நீண்ட உயரத்திலிருந்து விழும் அருவியில் தலையை நீட்டி நீராடுவதால், மெள்ளத் தலை மயிர் உதிரத் தொடங்கி விட்டது. இவ்வாறு மூன்று வேளையும் நீராடி விட்டு, அத்துறவியார் நிறைந்த இலைகளையுடைய தாளி என்ற செடியிலிருந்து இலைகளைப் பறிக்கிறார், வழிபாடு செய்வதற்காக. . . துறவியாரது இப்புதிய கோலத்தைக் கண்ட மாரிப் பித்தியார் அப்படியே அயர்ந்து விட்டார். துறவியாரது பழைய வாழ்வும், இப்பொழுதைய வாழ்வும் அப்புல வருடைய மனக்கண் முன்னர் மாறி மாறி வந்தன ! புலவர் அசையாமல் ஆடாமல் நின்று நின்றுவிட்டதைக் கண்டவுடன் வந்த நண்பர்கள். கலக்க மெய்தி விட்டார் கள். அத்துறவியாரது பழையகால வாழ்வை அறியாத வர்கள் அவர்கள். எனவே, புலவரை நோக்கி, அம்மை யீர், இத்துறவியார் இல்வாழ்வில் இருந்ததுண்டா ?” என்று வினவினார்கள். அவர்கட்கு விடை கூறுகிறார் புலவர், இரு பாடல்கள் மூலம். ஐ ய ன் மீ ர் , இத்துறவியாரது இப்பொழுதைய வாழ்வை மட்டுமே நீங்கள் காண்கிறீர்கள். ஆனால், இவருடன் இளமை தொட்டுப் பழகிய எனக்கு அக்கால நினைவுகள் வந்து வந்து செல்கின்றன. இப்பொழுது பொலிவிழந்து காணப்படுகிறார் இவர். இவரது சடை முதுகிற் கிடந்து உலர மறுக்கின்றது. அந்நாளில் இவரது குஞ்சி அழகே ஒர் அலாதி அழகு. இவர் பெருஞ்செல்வ ரா.கலின், சிறந்த வாசனைத் தைலங்கள் இட்டுப் பள