பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் , 37 பளவெனச் சீவி முடித்த தமது முடியுடன் மாலை நேரங் களில் உலாவப் புறப்படுவார். இவர் வாழ்ந்தது செல்வர் கன் வாழ்கின்ற பெரிய தெருவிலாகும். அத்தெருவில் ஒவ்வொரு வீடும் பெரிய அரண்மனை போன்றதாகும். இவர் உலாவப் புறப்பட்டவுடன் அவ்வீடுகளில் வசிக்கும் திருமணம் ஆகாத பெண்டிர் அனைவரும் கதவிடுக்கு வழி யாகவும், காலதர் வழியாகவும் இவரைக் கண்டு மகிழ்வர். X- 'அவர்கள் இவரைக்கண்ட்வுடன் தங்கள் மனத்தைப் பறி கொடுத்துவிட்டுக் காதல் நோய் கைம்மிகத் தங்களு டைய வளையல்கள் கழன்று விழ, மனம் வருந்தி நிற்பார் கள். அவர்கள் அவ்வாறு நிற்கும் காட்சி, இத்துணை ஆண்டுகள் கழித்தும் என் கண்ணை விட்டு நீங்க மறுக் கிறது. இப்பொழுது இவர் தாமே விறகை ஒடித்து எடுத்துச் சென்று தீ மூட்டிச் சடையைக் காய வைக்க முயல்கிறார். அந்த நாளைய சூழ்நிலை எங்கே, அகிற் புகையில் குஞ்சியை இவர் இப்பொழுது யானை ஒடித்துப் போட்ட விறகில் உலர்த்தும் நிலை எங்கே ' என்ற கருத்துப்பட ஒரு பாடல் பாடினார் அம்மையார். ... . ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில் பாவை அன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும், கன்முக்கண் நெடுவரை அருவி ஆடிக் கான யானை தந்த விறகில் கடுந்தெறல் செந்தி லேட்டுப் - புறந்தாழ் புரிசடை புலர்த்து லோனே : - (புறம். 251) (ஒவத்தன்ன- சித்திரம் போன்ற இடனுடை வரைப்பு-அகன்ற வீடு; இழைநிலை நெகிழ்த்த மள்ளன்வளையல்கள் கழலுமாறு செய்த வீரன் ; புறந்தாழ் புரிசடை- முதுகில் தொங்கும் முறுக்கேறிய சடை) , உடன் வந்தவர்கள் அத்துறவியாரை மேலும் வியப் புடன் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். துறவியார்