பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 A மகளிர் வளர்த்த தமிழ் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர்கள், ‘இவர் ஒரு வேளை ஊமையோ !” என ஐயுற்றார்கள். புலவர் கூறினார் : ஒலியுடன் விழுகின்ற அருவி நீரைத் தலையில் தாங்குவதால் நிறம் மாறித் தில்லந்தளிர் போலக் குறைவாக உள்ள தலைமயிரை உடைய இவர், இப் பொழுது தாளி இலையைப் பறிக்கின்றார். ஆனால், அந்த நாளில் வீட்டினுள் விளையாடும் இளைய மயில் போன்ற தம் மனைவியிடத்துப் பேசுவதைக் காண்டல் வேண்டும். இவர் பேச்சைக் கேட்டு மயங்கியே அவ்வம்மை இவரை மணந்துகொண்டாள். தம் சொல்லாகிய வலையால் மனைவியாகிய மயிலைப் பிடித்த வேடராவர் இவர்,” என்று பாடினார். கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்.இலைத் தாளி கொய்யு மோனே ! இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே !' . . " (புறம். 252) (தில்லை-தில்லந்தளிர் அள் இலை- செறிந்த இலை) இப்பாடலிலும் முன் பாடலிலும் உள்ள இறுதி இரண்டு அடிகளும் அப்புலவர் பெருமாட்டியாரது உள்ளத்தில் தோன்றிய எல்லை இல்லாத துயரத்திற்கு வடிவு கொடுக்கின்றன அல்லவா ? துறவியாரைக் கண்டு ஒரு பெண்பாற் புலவருக்குத்தானே இவ்வாறு பாட வரும்? 7. பிரிவைப் பாடிய மகளிர் மனிதப் பிறப்பு எடுக்கும் பொழுதே துயரமும் உடன் பிறக்கிறது. எத்தனையோ வழிகளில் இத்துயரம் வருதல் கூடும். எந்த வழியில் வந்தாலும் துயரம் துயரந்தானே !