பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 39 வருத்தம் நேரும் பொழுது மனித மனம் பலபடியாக எண்ணத் தொடங்குகின்றது. பல் வலி, வயிற்று வலிகளால் ஏற்படும் துயரம். துன்பம் என்றே கூறப்படினும், அவை உபசார வழக்கால் மட்டுமே அங்ங்னம் கூறப்படுகின்றன. உண்மையில் துயரம் என்பது பின்னர்க் கூறப்பெற்றவை மூலம் ஏற்படும் பொழுது, அவற்றின் தன்மை, ஆழம் முதலியன முற்றிலும் மாறுபட்டு விடுகின்றன. பிரிவுத் துயரம் என்பது பலரைப் பலபடியாக வருத்தும். கணவனை இழக்கும் துயரம் என்பது அலாதியானது. இந்நாட்டுச் சூழ்நிலையில், கணவன் என்பவன், மனைவி என்னும் கொடி பற்றிப் படரும் கொழுகொம்பாகவே அமைந்துவிடுகிறான். அவளுக் கென்று தனி வாழ்வே இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் எல்லா வகையிலும் சமம் என்று கூறிக் கொள்ளும் மேல் நாடுகளிற்கூட, கணவன் பெயரையே மனைவியர் ஏற்றுக்கொள்கின்றனர். 'திருமதி (Mrs.) இன்னார்' என்று அவனுடைய பெயரேதான் அவளுடைய பெயராய் அமைந்து விடுகிறது. அவ்வாறாயின், இந்நாட் டில் கேட்கவும் வேண்டுமோ ! - - தனக்கென்று தனி வாழ்வு இல்லாமல், கணவனது வாழ்வே தன்னது வாழ்வாகவும், அவனது வீழ்ச்சியே தனது வீழ்ச்சியாகவும் கருதினள் இந்நாட்டுப்பெண். இந் நிலை பழைய நாளில் மட்டும் அன்றி, இன்றுங்கூட ஏறத் தாழ அப்படியேதான் இருக்கிறது. மரத்தைப் பற்றிப் படரும் கொடியின் வாழ்வு, அந்தக் கொடி விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும், மரத்துடன் இணைந்தே உள்ளது. மரத்தை விட்டு வீழ்ந்துவிட்ட கொடியும் குடும்பத் தலைவனை இழந்த தலைவியின் வாழ்வும் ஏறத் தாழ இதே நிலைதான். தலைவனை இழந்து தலைவி படும் துயரத்தை மற்றொரு பெண்தான் அனுபவிக்க முடியும்.