பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 A மகளிர் வளர்த்த தமிழ் எவ்வளவு தூரம் ஓர் ஆண் மகன் அத்துயரத்தைக் கற்பனை செய்துகொண்டாலும் முற்றிலும் அதனை அறிய முடியாது ; அறிந்தாலும் அதை உணர முடியவே முடியாது. ஒருவர் படுந்துயரத்தை அறிதல் வேறு : அதனை உணர்வது வேறு. மருத்துவன் நோயாளியின் நோயையும் அது வந்த காரணத்தையும் அறியலாம். ஆனால், நோயாளியின் வருத்தத்தை உணர முடியாது. ஒரு வேளை மருத்துவனும் அந்நோயில் துன்புற்றிருந் தால், அவன் வருத்தத்தை உணர முடியும். நல்ல ஒரு தமிழ் மகன் வீட்டைக் காண்கிறோம். பல் வகை வளங்களும் அப்பெருமகன் வீட்டில் நிறைந்துள்ளன. வளங்கள் நிறைந்திருந்தால் மட்டும் போதுமா ? இன்று எத்துணைப்பேர் வீடுகளில் அனைத்து வளங்களும் நிறைந் துள்ளன ? ஆனால், அவ்வளத்தால் யாருக்கு என்ன பயன்? பல சமயங்களில் அவ்வீட்டாருக்குக்கூட அவ்வளத் தால் ஏற்படும் பயன் கிட்டுவதில்லை. ஏன் ? செல்வம் முதலிய வளமுடைய மனிதனிடம் மனவளம் இல்லையா யின், யாது பயன் விளையும் ? பொருளைப் பெற்று வைப்பது, பிறருக்கு வழங்கித் தானும் அனுபவிக்கத் தானே ? அவ்வாறு பிறருக்கு வழங்க முற்படும் மனத்தைத் தான் வளமுடைய மனம் என்று கூறுகிறோம். ஆனால், மன வளம் இயற்கையிலேயே கிடைக்க வேண்டும்; பிறப்பி லேயே ஊறியிருத்தல் வேண்டும். - 'மணிவெளுக்கச் சாணையுண்டு முத்துமாரி யம்மா ! மனம்வெளுக்க வழியிலையே முத்துமாரி யம்மா !” என்று கவியரசர் பாரதியார் கதறுவதன் கருத்து இதுவே. மன வளமும் பொருள் வளமும் நிறைந்த அத்தமிழ்ப் பெருமகன் வீட்டிற்குத் தாயங்கண்ணியார்’ என்ற புலவர் பெருமாட்டியார் ஒருமுறை சென்றிருந்தார். அச்செல்வன் அரசன் அல்லன் : குறுநில மன்னனும் அல்லன் ; ஆனால், நிறைந்த செல்வமுடைய குடிமகன்தான். அவ்னைப் பார்க்கச் சென்ற புலவருக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது.