பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. வானசம்பந்தன் A 41 செல்வன் வீட்டில் பெருங் கூட்டம் ஏதேனும் விசேட மாய் இருக்கும் ; உறவினர்கள் வந்திருக்கலாம், எனக் கருதினார் புலவர். நெருங்கிச் சென்று கண்ட பொழுது, உண்மை தெரிந்தது. கூட்டத்தினர் அவனுடைய உறவினர் அல்லர். அனைவரும் இரவலர் , வள்ளல்ைத் தேடிச்சென்று பாட்டுப் பாடியும் நாட்டியமாடியும் பரிசில் பெறும் ஏழை மக்கள். அத்துணைப் பேருக்கும் செல்வன் வீட்டில் விருந்துச் சமையல் நடைபெறுகிறது. என்னே, இச்செல் வனது தாராளம் வீட்டினுள் நுழையும் போதே தாளித வாசம் மூக்கைத் துளைக்கிறது. - - பண்டங்கட்குத் தாளிதம் செய்து மணத்தை மிகுதிப் படுத்தும் வித்தையைத் தமிழப்பெண் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கண்டு வைத்திருந்தாள் ! கோலா கலமான நிலையில் உள்ள செல்வன் வீட்டில் நுழைந்தார் அம்மையார் உள்ளே இருக்கும் விருந்தாளிகளைக் கண்டு, "என்ன விசேடம் ? என்று கேட்டார். விசேடம் ஒன்றும் இல்லையாம்- செல்வனைக் கண்டு பரிசில் வாங்கிப்போக வந்த இரவலர்களாம் அவர்கள் விசேடமில்லாத சாதா ரண நாளில் இவ்வளவு தடபுடலாகச் சமையல் ஏன் ? இது புலவர் பெருமாட்டியாரது வினா. - விருந்தினர்கள் சிரித்தார்கள் ; வாய் விட்டுச் சிரித் தார்கள் ; ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு மேலுஞ் சிரித்தார்கள். அம்மையார் மருண்டு விட்டார் ; கேட்கத் தகாதவற்றைக் கேட்டு விட்டோமா ! என்று அஞ்சி விட்டார். உடனே அவரது முகம் வாடிவிட்டது. இதனைக் கண்ட அப்பரிசிலர்களுள் ஒரு முதியவன் புலவரின் பக்கத்தில் வந்து பேசத் தொடங் கினான். 'அம்மையிர் ! மன்னிக்க வேண்டும், இவ் வீட்டிற்கு நீங்கள் இதற்கு முன் வந்ததில்லை போலிருக் கிறது !' 'இல்லை. இது வரை வந்ததில்லை." அது தெரிகிறது, உங்கள் வினாவிலிருந்ே