பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலக மொழிகள் பலவற்றிலும் இல்லாத சிறப்பு ஒன்று தமிழில் உண்டு. இற்றைக்கு இரண் டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்ச் செழித்து வளர்ந்த மொழிகளாகிய கிரேக்கம், இலத்தீன் முதலியவை இன்று பழைய நிலையில் இல்லை. மக்கள் சமுதாயத்தில் செம்பாதியினராகிய மகளிர், அம்மொழி வளர்ச்சியில் பங்கு கொள்ள வில்லை போலும் அதனை முழுத்தன்மை பெற்ற தென்று கூற முடியுமா ? ஆனால், அவற்றின் வாழ்வுக் காலத்திலேயே வீறுடன் விளங்கிய நம் மொழி, இன்றும் அந்த வீறுகுன்றாமல் இருக்கின்ற தெனில், அதற்குரிய காரணம் யாது ? நம்முடைய நாட்டைப் பொறுத்த மட்டில் நிலைமை வேறு விதம். இங்கு ஆடவர், பெண்டிர் ஆகிய இருபாலருமே இவ்வளர்ச்சிக்கு உதவியுள்ள னர். சங்ககாலம் என்று வழங்கப்படும் அப்பழைய நாளில் நம் நாட்டு மகளிர் மொழி வளர்ச்சிக்கு மட்டுமா உதவினர் ? அவர்கள் புகுந்து பணி ஆற்றாத துறையே இல்லை என்று கூறலாம். அரசியராய் இருந்து நாடாண்டனர் : தூதுவ ராய்ச் சென்று சந்து செய்வித்தனர் : ஆசிரியராய் இருந்து அறிவு கொளுத்தினர் : இன்னம் எத் துணையோ துறைகளில் அவர்கள் தொண்டு நடைபெற்றுள்ளது. ஆானசம்பந்தன் .8 .94قے س