பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 A மகளிர் வளர்த்த தமிழ் புலவர் மேலும் வருந்தினார். இரவலன் மேலுங் கூறினான். "அம்மையிர், இச்செல்வன் வீட்டில் விசேடந்தான். தினந்தோறும் நூற்றுக் கணக்கான பரிசிலர் வருவர். அத்துணைப் பேருக்கும் விமரிசையான விருந்து நடை பெறும். தாளிதப் புகையின் வாசனையால் தெருவில் செ ல் கி ற வ ர் க ள் உள்ளே வந்துவிடுகிறார்கள். அம்மட்டோ வந்தவர்கள் திரும்பிப் போவது பற்றியே கவலைப்படுவதில்லை.அதைக்கொண்டே உள்ளே வந்தவர் பலர். அதோ, அங்கு நிற்கும் இரவலன் இவ்வீட்டினுள் துழைந்து ஒராண்டு ஆகிறது. யான் இங்கு வந்து ஒன்றரை ஆண்டாகிறது. செல்வர் எங்களை விட்டால்தானே, நாங்கள் வீடு திரும்ப முடியும் ?” புலவர் பெருமாட்டியார் வாய் பேச முடியாமல் அயர்ந்து விட்டார். அச்செல்வன் வீட்டில் சில நாள் தங்கி மீண்டுவிட்டார். ஓராண்டு ஒடி மறைந்தது. புலவர் தாயங்கண்ணியார் மறுபடியும் அந்தச் செல்வன் ஊர்ப்பக்கம் செல்ல நேர்ந்தது. அவர் அவன் வீட்டு வாயிற் பக்கம் போனார். தாளித மணம் ஒன்றும் வீசவில்லை. வருவாரும் போவாரும் நிறைந்திருந்த அவ்வீட்டில் குருவிகூட இல்லை. புலவருக்கு வியப்புத் தாங்கவில்லை. இப்படியும் இருக்க இயலுமா !' என ஐயுற்றார் ; அடைத்திருந்த கதவைத் துணிந்து திறந்து கொண்டு உட்சென்றார். முன்னர் அவர் வந்த பொழுது உபசரித்த செல்வரின் மனைவியா இவள் ! இது என்ன கோலம் இவள் உடம்பு பாதியாகி விட்டது. தலையைப் பார்த்தார் புலவர் ; கழுத்தைக் கண்டார் ; கைகளை நோக்கினார் ; உடையை உற்றுப் பார்த்தார். உண்மை விளங்கிவிட்டது ! π வீட்டினுள் நுழையும் போது, செல்வர் வெளியூர் சென்றிருக்கலாமோ !' என ஐயுற்ற புலவருக்கு அம்மை யைக் கண்டவுடன் உண்மை தெரிந்துவிட்டது. செல்வன்