பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 43. ஊருக்குச் சென்றுவிட்டான். ஆம் வாராத ஊருக்குச் சென்றுவிட்டான். + . என்ன கொடுமை : அச்செல்வன் மனைவி, இக்கற்புக் கரசி, துயரமே உருவெடுத்தது போல இருக்கிறாள். இருக் கிறாளா ? இல்லை நடைப் பிணமாய் உலவுகிறாள். அதோ மூன்லைகளில் இவளுடைய பிள்ளைகள் ஒடுங்கி" அமர்ந்து, ஏதோ பேசிக்கொள்கின்றனர். ஒடியாடித். திரிந்து, வருவோர் மனத்தையெல்லாங் கவர்ந்த இப் பிள்ளைகள், இப்பொழுது பெருங்காற்றால் வீழ்ந்துவிட்ட மரக்கிளைகள் போலப் பொலிவிழந்து காணப்படுகிறார் கள். இவர்கள் மனத்தைத் தேற்றப் புலவருக்கு வாய்' இல்லை. புலவர் மனத்தில் துயரம் ஆறாய்ப் பெருகுகிறது. ஓராண்டுக்கு முன் வந்திருந்த பொழுது இவ்வீட்டில் நடை. பெற்ற களியாட்டம் இவர் மனத்திரையில் ஒடுகிறது; இப் பொழுது இருக்கும் நிலையும் கண் எதிரில் தெரிகிறது. அல்லி அரிசியை உண்டு உயிர் வாழ்கிறாள் தலைவி. ஏன் ? கைம்மை நோன்பு நோற்கிறாள். உயிரை ஏன் வைத்திருக் கிறாள் தெரியுமா ? மூல்ையில் உள்ள அவ்விளங்குழந். தைகள் பொருட்டே அவள் வாழ்கிறாள். அவள் வாய்' திறந்து ஒன்றுங் கூறவில்லை. ஆயினும் புலவருக்கு, முற்றும் விளங்கி விடுகிறது. அத்துயரம் கவிதையாக உரு வெடுக்கிறது. . குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவல்ர்த் தடுத்த வாயில் புரவலர் - கண்ணிர் தடுத்த தண்நறும் பந்தர்க்' கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி" அல்லி உணவின் மனைவியொடு இனியே புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்’ வான்சோறு கொண்டு திம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர். தந்தை - தனித்தலைப் பெருங்காடு. முன்னில் பின்னே." - . (புறம். 250).