பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 45 பாண்டியர் சோழர்மேல் படை கொண்டு தாக்கினர். யாது காரணமோ, பாண்டியர்க்கு வெற்றி கிட்டவில்லை. இரண்டடி நிலத்துக்காகத் தாயத்தார் வழக்கிடுவதை நாம் கண்டிருக்கிறோமல்லவா அந்நிலத்தின் விலையைப் போல் பதினாயிரம் மடங்கு பணத்தை நீதி மன்றங்களில் செலவழிப்பார்கள். ஏன் தெரியுமா ? தம்முடைய மானமே. அந்த இரண்டடி நிலத்தில் புதையுண்டு கிடப்பதாகக் கருது கிறார்கள் ; அவ்வாறே சொல்லவும் சொல்வார்கள். ‘மானம்' என்பதன் பொருளை அறியாமற் பேசுகிறவர்கள் இவர்கள். இரண்டடி நிலம் கையை விட்டுப் போய் விடுவ தால் மானம், கெளரவம் என்பவை போய் விடுமா ? மானம் என்பது யாது ? இதோ பரிமேலழகர் கூறு கிறார், 'மானம்' என்ற அதிகாரத்தின் முன்னுரையில். மானம் என்பது நிலத்திலும், பிறர் நம்மைப் பற்றி இழி வாகப் பேசுவதிலும் இருப்பதானால் திருவள்ளுவர் இம் மானத்திற்கு ஒர் அதிகாரமே எழுதுவாரா ? எனவே, மானம் என்பது நாம் நினைப்பதுபோல அவ்வளவு மட்ட மானதன்று. அது யாது? மனிதன் எஞ்ஞான்றும் (எப் ப்ொழுதும்) தன் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு. நேர்ந்துழி (வந்தால்) உயிர் வாழாமையுமாம். இவ்வாறு பரிமேலழகர் கூறியதை வள்ளுவர் கருதியதை, அன்றும் ஒருவரும் அறியவில்லை இன்றும் ஒருவரும் அறிய முயல வில்லை. ஒல்லையூர் நாடு சோழர், கையில் இருப்பதால் தம் முடைய மானம் போய்விட்டதாகப் பாண்டியர் கருதினர். ஒவ்வொரு பாண்டியன் காலத்திலும் ஒரு முறையும், பல முறையும் போரிட்டனர். ஆனால், உயிர்கள் அழிந்தது தவிரப் பாண்டியர்க்கு வெற்றி கிட்டவில்லை. இந்நிலை யில் பூதப்பாண்டியன் பட்டம் பெற்றுப் பாண்டிய நாட்டை ஆளத் தொடங்கினான்; தன் முன்னோர் செய்ய முயன்று தோற்றுப்போன காரியத்தைத் தான் எடுத்துச்