பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 A மகளிர் வளர்த்த தமிழ் செய்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கருதினான். அவ்வாறு கருதியது சரியோ தவறோ-அதுபற்றிக் கவலை இல்லை. பாண்டியர் குடிப் பெருமையைக் காப்பாற்ற இத்துணைப் பேர் உயிரை மாய்க்க வேண்டுமா என்று அம்மன்னன் சிந்தித்துப் பார்க்கவில்லை. அது தவறாய் இருக்கலாம். ஆனால், படை எடுப்பதன் முன் நன்கு சிந்தித்துத்தான் புறப்பட்டான். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்பது இழுக்கு." (குறள், 467) என்று பொதுமறை கூறுவதை நன்கு ஆய்ந்து முடிவுக்கு வந்தான் பாண்டியன். அம்மட்டோ ! X "வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் துக்கிச் செயல். (குறள், 471) என்ற குறளுக்கு ஏற்பப் படையெடுப்பின் இயல்பையும், அதனைச் செய்ய வேண்டிய தன் படையின் வலிமையை யும், மாற்றானாய சோழன் வலிமையையும், தனக்கும் சோழனுக்கும் துணை வரக்கூடியவர்கள் படைப் பலத்தை யும் ஆராய்ந்து பார்த்தான். தன்படை, தன் துணைப் படை இரண்டையும் கொண்டு சோழனை வெல்ல முடியும்.என்ற முடிவுக்கு வந்த பாண்டியன், அதற்கேற்ற காலத்தையும் ஆய்ந்தான். - 'பகல்வெல்லும் கூகையைக் காக்கை ; இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.' (குறள், 481) என்பது குறள். காக்கையைவிடக் கதை வலிவுடைய தாயினும், பகல் நேரத்தில் காக்கையினிட்ம் தோற்று விடும். எனவே, எத்துனைப் படை வலியுடையனாயினும், இலம் சரியில்லையாயின், எஞ்சுவது தோல்வியே. இரவியத் தலைநகரான மாஸ்கோவின் குளிர்காலக் கொடுமையை அறியாத நெப்போலியனும், ஹிட்லரும் அங்கே தோற்றமையைச் சரித்திரங் கூறுகிறது.