பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 47 எனவே, பூதப் பாண்டியன் காலங்கருதி இடத்தாற் படை கொண்டு சோழர்மேல் சென்றான். விளைவைப் பற்றிக் கேட்க வேண்டுமா ? ஒல்லையூர்ப் போரில் இம்முறை பாண்டியன் வெற்றி பெற்று விட்டான். நீண்ட நாளாகப் பாண்டியர் கண்டு கொண்டிருந்த கனவு, பூதப் பாண்டியன் காலத்தில் நனவாயிற்று. எனவே, அதிலிருந்து அவனுடைய பெயருடன் அவ்வெற்றியை இணைத்து 'ஒல்லையூர் தந்த (வென்ற) பூதப் பாண்டியன்' என்றே அனைவரும் வழங்கலாயினர். - இப்பூதப் பாண்டியனுடைய புறவாழ்வில் பெரு வெற்றி கிட்டியது போல, அக வாழ்விலும் பெரு வெற்றி கிட்டியது. ஆம் ; மனத்துக்கிசைந்த மனையாள் ஒருத்தி கிடைத்தாள். அப்பெருமாட்டியின் பெயர் பெருங் கோப்பெண்டு என்பதாகும். பாண்டியனும் அவன் மனைவியும் சரியான ஜோடி!' அவன் போரிற் சிறந்தவன். அவள் கல்வியிற் சிறந்தவள். . இருவரும் கவிஞர். வாழ் நாளில் இந்த ஒரே போரைச் செய்து சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டான் அவன். வாழ்நாளில் கடைசிநாளில் ஒரே ஒரு பாடலைப் பாடிச் சரித்திரத்தில்- இலக்கியத் தின் சரித்திரத்தில்- அழியா இடம் பெற்றுவிட்டாள் அம்மாதரசி. - காதலர் இருவரும் கருத்து ஒருமித்து வாழ்ந்தனர் ; தமிழர் கண்ட அகவாழ்வை மிகச் சிறந்த முறையில் நடத்தினர். அவனுக்கும் அவளுக்கும் இன்ப துன்பங்கள் ஒன்றாகவே வந்தன. உடலளவில் அவர்கள் இருவரே. அவன் ஆண் ; அவள் பெண். அரசியல் அலுவல்களைக் கவனிக்கும் பெரும் பொறுப்பு வாய்ந்தவன் அவன். அத்தனையையும் செ ய் யு ம் அவனைக் கவனிக்கும் பொறுப்பு அவளுடையதாகும். - உடலளவில் வேறுபட்டிருந்த அவ்வீரனும் அப்புலமைப் பெருமாட்டியும் உயிரால் ஒ ன் றாய் இருந்தனர். மணிவாசகப் பெருமான் பாடிய திருக்கோவையார்