பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 A மகளிர் வளர்த்த தமிழ் பாட்டிற்கு இலக்கியம் வேண்டுமானால் இவர்களைக் கூறலாம். இதோ பெருமான் கூறுகிறார். 'காகத்து இருகண்ணிற்கு ஒன்றே மணிகலந் தாங்குஇருவர் ஆகத்துள் ஒருயிர் கண்டனம் யாம் ;இன்று யாவையுமாம் ஏகத்து ஒருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்ப துன்பங்களே. (திருக்கோவை, 71) (ஆகத்துள்-உடம்புள்; 3-ஆம் அடி-உவமை இல்லாது ஒருவனாய் நிற்கும் சிற்றம்பலப் பெருமான். ஊரின் ; தோகை- தலைவி ; தோன்றல்-தலைவன்:) இன்பமும் துன்பமும் ஒன்றாகவே அனுபவித்தனர். இருவரும். இத்தகைய சிறந்த காதலர்களைக் கண்டால் மனிதர்கட்குப் பொறாமை ஏற்படுவது இயற்கைதான். ஆனால், யமனுக்குக்கூடப் பல சமயங்களில் இந்த அற்பப் புத்தி தோன்றி விடுகிறது. கீரியும் பாம்புமாய் வாழும் கணவனும் மனைவியும் நூறு வயது வரை வாழக் காண்கி றோம். இத்தகைய சிறந்த வாழ்வு வாழ்ந்த பாண்டியனை யும் அவன் மனைவியையுங் கண்டு பொறாமை அடைந் தான் யமன். பெருங்கோப்பெண்டின் வாழ்வைப் பாழாக்க முடிவு செய்துவிட்டான் கண்ணில்லாக் காலன் ; பூதப்பாண்டிய னைக் கொண்டு சென்றுவிட்டான். ஏனைய பெண்களைப் போல அழுது அரற்றிவிட்டுக் கைம்மை நோன்பு நோற்கத் தயாராக இல்லை பெருங்கோப்பெண்டு. அவள் செய்த செயலை உடனிருந்து பார்த்த மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர் பிரான் இதோ கூறுகிறார் : மதுரையை அடுத்தது காடு. காளிகோயில் எதிரே பெரிய குழி