பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 49 தோண்டி, அதில் பெருந்தீ மூட்டியுள்ளார்கள். தீ, சுடர் விட்டு எரிகிறது. அரசமாதேவி நீராடிவிட்டு ஈரக்கூத்தல் முதுகிற்கிடந்து புரள வருகிறாள். அவள் முகத்தில் கவலைக் குறியே காணவில்லை ! ஆனால், கண்களில் மட்டும் நீர் ஆறாய்ப் பெருகுகிறது. அனைவரும் வழிவிட்டு நிற்கின்றனர். அவள் மட்டும் தனியே வந்தது இன்றுதான். ஒரு கண நேரம் கணவனைப் பிரியினும், உயிர் நடுங்கும் இவள், இதோ தீயில் புகுந்துவிட்டாள் !" என்ற பொருளில் புலவர் பாடினார். (புறம், 247) தியை வலம் வந்துகொண்டிருக்கும் அந்நிலையிற்கூடப் பல பெரியவர்களும் தலைமையமைச்சனும் அவளை அச்சத்துடன் தடுக்கின்றனர். ஏன் ? பா எண் டி ய ன் பட்டத்தை ஏற்கப் பிள்ளை இல்லை. இப்பொழுது உடனே வேறு மன்னனைத் தேடிப் பட்டத்தில் வைப்பதும் இயலாத காரியம். பாண்டியர் பரம்பரையில் பெண் அரசாள்வது வியப்பொன்றும் இல்லை அறிவாலும் கல்வியாலும் சிறந்த அரசமாதேவி ஏன் ஆட்சியை ஏற்று நடத்தக் கூடாது? அவர்கள் அரசமாதேவியின் திருவடியில் வீழ்ந்து வேண்டுகின்றார்கள். அவர்களை எள்ளல் குறிப்புடன் பார்த்து அரசமாதேவி இதோ கூறுகிறாள் : "பல பெரியவர்களே, பல பெரியவர்களே, நீயும் கண வனுடன் சென்றுவிடு' என்று கூறாமல், உயிர் வாழ்க’ எனக் கூறும் பொல்லாத சூழ்ச்சியையுடைய சான்றோர் களே, அணிலின் முதுகிலுள்ள கோடு போல் வரிகளை உடைய வெள்ளரிக்காயை வாளால் பிளக்கும் பொழுது கிடைக்கும் விதை போன்ற வெண்மையான நெய்யைக் கையிலும் தொடாமல், இலை இடையே போடப்பட்ட கைப்பிடியளவு நீருடன் கலந்த பழைய சோற்று உருண் டையை, வெண்மையான எள் துவையலுடன், புளியுடன் கலந்து சமைக்கப் பெற்ற வேளைக் கீரையைத் தொட்டுக் கொண்டு, உணவாக உண்டு, பருக்கைக் கற்கள் நிறைந்த மகளிர்-4