பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 A மகளிர் வளர்த்த தமிழ் தரையில் பாய் இல்லாமல் படுத்து வாழும் கைம்மை நோன்பு நோற்கும் பெண்களுள் யாமும் ஒருத்தி அல்லேம். புறத்தேயுள்ள காட்டில் மூட்டப்பட்ட கரிய மரக்கட்டை களால் ஆகிய பிணப் படுக்கை நுமக்கு அரியதாக இருக் கட்டும். எம்மைப் பொறுத்தவரை, பெரிய தோள்களை யுடைய எம் கணவன் இறந்துவிட்டமையின் மொட்டில் லாமல் அனைத்தும் மலர்ந்துள்ள தாமரைத் தடாகமும் இத்தீயும் ஒன்றுதான், என்ற பொருளில் பாடினாள் அப் பெருமாட்டி, தீப்புகுமுன். பல்சான் றிரே பல்சான் றிரே ! செல்கஎனச் சொல்லாது ஒழிக.என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் loர ! அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்து அட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை! வல்சி யாக பரல்பெய் பள்ளி பாய்இன்றி வதியும் உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ ! பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரிது ஆகுக தில்ல ; எமக்குளம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஒரற்றே ! (புறம். 246) அப்பெருமாட்டியைத் தடுப்பவர் தன்னலமாகிய சூழ்ச்சியுடையவர்கள் தாம். அங்ங்னம் சூழ்ச்சி செய்தவர் களைப் பல் சான்றவர்களே !' என்று அழைப்பதில் எவ்வளவு கேலி நிறைந்துள்ளது எமக்குத் தீயும் தாம ரைப் பொய்கையும் ஒன்று' என்று கூறுவதாலும், எமக்கு” என்று கூறுவதாலும் அப்பெருமாட்டி அர சரி ல் பிறந்து, அரசரில் வளர்ந்து, பேரரசியானவள் என்பது