பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 51 தெரிகிறது. கைம்மைநோன்பு நோற்பவர்களை உயவல் (வருந்தும்) பெண்டிர் என்று கூறும் பொழுது பெருமிதம் என்னும் சுவை (காம்பீர்ய ரசம்) வெளிப்படுகிறது. அப் பாண்டியன் ஒரு வெற்றியால் என்றும் வாழ்கிறான் ; இப்பெருமாட்டி ஒரு பாடலால் என்றும் வாழ்கிறாள். 9. ஐயோ, யமனே! இப்பரந்த உலகில் பலரைப் பார்க்க நேர்கிறது நமக்கு. சிலரைப் பார்க்கும்பொழுதே, சில எண்ணங்கள் மன்த்தே தோன்றுகின்றன. ஒரு சிலரைப் பார்க்கும் பொழுதே, "ஐயோ, பாவம் : இவர் எவ்வாறு உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்!’ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் உடலமைப்பு, நடை, உடை, பாவனை ஆகியவை தாம் நம்மை இவ்வாறு எண்ணத் துரண்டுகின்றன. ஆனால், இன்னம் சிலரைக் காண்கிறோம். வழக்கமாக ஒருவரைக் கண்டவுடன், 'என்ன, இளைத்திருக்கிறீர் களே " என்று தொடங்கும் பேச்சுமுறை, இந்த இரண்டா வது வகையாரைக் கண்டவுடன் நின்று விடுகிறது. நல்ல திடகாத்திரத்துடன் இருக்கும் இவர்களைக் காணும் பொழுதே, செளக்கியம்’ என்பதன் பொருள் இதுதான் என்பதை அறிகிறோம் ! - இத்தகைய திடகாத்திரமான உடற்கட்டு உடைய வர்கள் இறக்கக்கூடியவர்கள் என்பதை நம் மனம் நம்ப மறுக்கிறது. எப்படி அவர்கள் இறக்க முடியும் என்று வியப்படைகிறோம் ! - சோழன் கிள்ளிவளவன் சிறந்த உடலமைப்புப் பெற்ற வன் ; பெருவீரன். அவன் செய்த போர்கள் அனேகம், அந்த மர்பெரும் வீரன்பால் வந்து பரிசில் வாங்கிச் சென்ற பரிசிலர் கட்கும் புலவர்கட்கும் அளவில்லை. ஏதோ சென்