பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 A மகளிர் வளர்த்த தமிழ் றோம் ; பரிசிலைப் பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம் !” என்ற முறையில் அப்புலவர்கள் போனதுமில்லை. அவ னிடம் ஆழமான நட்புக்கொண்டுவிட்டனர் அப்புலவர் பெருமக்கள் அவன் காலத்தில், அவனிடம் நட்புக்கொண் டிருந்த புலவர்கள் ஆலத்துனர் கிழார், மாறோக்கத்து நப் பசலையார் முதலிய பத்துப் பேர்கள். அப்பத்துப் புலவர் களுள் மாறோக்கத்து நப்பசலையார் என்பவர் பெண்பாற் புலவராவார். கிள்ளி வளவனுடைய தலைநகர் திருச் சிராப்பள்ளியை அடுத்த உறையூராகும். தமிழ் மூவேந் தருள் ஒருவனாகிய சேரனை வென்ற பெருமை அக்கிள்ளி வளவனுக்கு உண்டு. . . . . எத்துணைப் பெரிய வேந்தனாயினும் அவன் பரி சிலர்க்கும் இரவலர்க்கும் அடையா வாயிலை உடையான் என்பது உறுதி. ஏனையோர் அவன் அரண்மனையில் நுழைய இயலாமல், காலத்தையும் அவன் உத்தரவையும் எதிர் பார்த்து நிற்கலாம். ஆனால், புலவர்களும் பாணர் களும் அவன் ஆணையை எதிர் பாராமலே உள்ளே நுழைந்து அவனைக் காணலாம். மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவர் பெரு மாட்டியார் கிள்ளி வளவன் நண்பருள் ஒருவர். அவ னுடைய அரண்மனையுள் புலவரும் பரிசிலரும் உத்தர வின்றி உள்ளே நுழைவதைப் பல முறை கண்டிருக்கிறார் அவர். அவருக்கு ஒர் ஐயம் எழுந்ததுண்டு. பகைவர்களும் இப்படிப் புலவர் போலவும் பாணர் போலவும் உள்ளே நுழைந்துவிட்டால் என்ன செய்வது தம் அருமை நண்பனாகிய, கிள்ளிக்கல்லவோ அது பெருந்தீமை பல நாள் புலவர் பெருமாட்டியார் இது பற்றிச் சிந்தித்தார். இறுதியாக ஒருநாள் கிள்ளியிடம் தம் மனத்தில் உண்டான அச்சத்தைக் கூறிவிட்டார். கிள்ளி வாய் விட்டுச் சிரித்து விட்டான். - - புலமைச் செவ்வியீர், அஞ்ச வேண்டா. தம் வீரத் தையும் மானத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட் டு,