பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 53 வஞ்சகமாகப் பரிசிலரைப் போல உள்ளே நுழையும் பகைவர் தமிழ் நாட்டில் இலர். ஒரோவழி வெளி நாட்டிலிருந்து வருவார்களாயின், அவர்கள் நடையுடை முதலியவற்றிலிருந்து அவர்களை அறிந்துகொள்ளலாம். ஆதலின், உம் நண்பனாகிய எனக்குத் தீங்கு நேரும் என்று அஞ்ச வேண்டா !” என்று அவன் அப்புலவருக்கு அமைதி கூறினான். - - . - மாதங்கள் சில சென்றன. நப்பசலையார் எங்கோ ஒர் ஊரில் சுற்றிக்கொண்டிருந்தார். அந்தத் துயர் மிகுந்த செய்தி அவர் காதுக்கு எட்டிற்று, கிள்ளி வளவன் இறந்துவிட்டான், குளமுற்றம்’ என்ற ஊரில் தங்கி யிருக்கும் பொழுது என நப்பசலையாருக்கு ஆறாத்துயரம். பெருகியது. கடைசி முறையாகக் கிள்ளி வளவனைச் சந்தித்த பொழுது பேசிய பேச்செல்லாம் நினைவுக்கு வந்தன. பரிசிலர் போல் வேடமிட்டு வந்தால் ஒழிய அவனை யாரும் அனுக முடியாதே அந்த யமன் எவ்வாறு வளவனை அணுகினான் ? அவன் வழக்கமாக ஏறிச் செல்கின்ற வாகனத்தில் ஏறிக் கையில் பாசக் கயிற்றை ஏந்திச் சென்றிருந்தால், அவன் பாடு திண்டாட்டந்தான். கிள்ளி வளவன் எதிரே தன் சுய வடிவுடன் செல்வதற்கு யமனுக்கு எ ன் ன, பைத்தியமா பிடித்திருக்கிறது ? எப்பொழுதும் பிறர் உயிரைக் கவர்ந்து செல்லும் தொழிலுடைய அந்த யமனுக்குத் தன உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வழி தெரியாதா, என்ன ! உறுதி யாக அவன் கிள்ளியின் எதிரே சென்றிருக்க மாட்டான். எதிரே செல்லாமல், பின்புறமாகக் கோழையைப் போலச் சென்று, கிள்ளியின் உயிரை ஒருவேளை கவர்ந்திருப் பானோ ! இல்லை ! இல்லை ! அப்படிச் செய்திருக்க மாட்டான். எதிரேதான் சென்றிருப்பான் ; ஆனால், வழக்கமான தன் கோபத்தையும் வீரத்தையும் காட்டிக் கொண்டு சென்றிருக்க மாட்டான். அவற்றிற்குப் பதிலாக...? ஆம் இப்பொழுது புரிந்துவிட்டது அவன்,