பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 A மகளிர் வளர்த்த தமிழ் செயல் இரவலரைப் போல, பரிசில் வேண்டுபவரைப் போல, கிள்ளியின் முன்னர்ச் சென்று வேண்டியிருப்பான். அவனிடம் இரக்கம் கொண்ட கிள்ளி, என்ன வேண்டும் ? என்று கேட்டிருப்பான். உன்னுடைய உயிர்தான் வேண்டும்,' என்று அந்தக் காலன் கேட்டிருப்பான். பரிசில் மக்கள் எதனை வேண்டினாலும்- ஆம் ! உயிரையே வேண்டினாலும்- மறுப்பவன் அல்லன் கிள்ளி வளவன். எனவே, யமனுக்கு உயிரைப் பரிசிலாக- அல்ல பிச்சை யாக- ஈந்து விட்டான். இவ்வாறு நப்பசலையார் என்ற அப்பெண்மணியார் நினைந்து, அந்நினைவை ஒரு பாடலாக வடித்தார். செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினும் உய்வின்று மாதோ ! பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார் மண்டுஅமர் கடக்குந் தானைத் திண்டேர் வளவன் கொண்ட கூற்றே !’ (புறம். 226) (செற் றன்றாயினும்-மனத்துள் கறுவு .ெ கா ண் டா யினும் ; செயிர்த்தன்றாயினும்-வெளிப்படக் கோபித்த தாயினும் உற்றன்றாயினும்-உடம்பைத் தொட்டா யினும் ; உ ய் வி ன் று-அந்த யமன் பிழைத்திருக்க மாட்டான் ; பொலந்தார்-பொன்னாலாய மாலையை அணிந்த 1 கிள்ளிவளவனைக் கொண்டுபோன யமன் அவன் உயிரைப் பிச்சைக்காரர்போல வேண்டித்தான் பெற் றிருக்க வேண்டும். ஐயோ, யமனே இரக்கம் அற்றவனே ! கிள்ளியின் சாவைக் கேட்டறிந்த ஆவடுதுறை மாசாத்தனார் என்ற மற்றொரு புலவர் யமனை முட்டாள் என்று கூறுகிறார். ஏன் தெரியுமா? எந்தப் பைத்தியக்காரனாவது விதை நெல்லைச் சமைத்து உண்பானா ? இந்த யமன் சாப்பிட்டு விட்டானே ! கிள்ளிவளவன் உயிரோடு இருக்