பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 55 கும் வரை தினம் ஆயிரக்கணக்கானவரைப் போரில் கொன்று யமனுக்கு விருந்திட்டான். ஆனால், கிள்ளியை இன்று கொண்டு போன கூற்றுவன் பைத்தியக்காரன் அல்லனோ ? - 'நனியே தையே நயனில் கூற்றம் t - விரகு(தந்திரம்) இன்மையின் வித்துஅட்டு உண்டனை : - (புறம். 227) என்று கூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். இந்தப் பாழும் யமன் சில சமயங்களில் செய்கின்ற காரியம் எத்துணைப் பேர் தலையில் விடிகிறது, தெரியுமா? அவன் நினைக்கிறான், ஒருவனுடைய உயிரை மட்டும் கவர்ந்து செல்வதாக. ஆனால், அந்த ஒருவன் சாதாரண மனிதனாய் இருந்துவிட்டால் கவலை இல்லை. அவ்வா றில்லாமல், சில சந்தர்ப்பங்களில் ஒருவனை நம்பி ஆயிரக் கணக்கானவர் வாழ நேரிடுகிறது. அத்தகைய சந்தர்ப்பங் களில், ஆணி வேர் போல இருக்கும். அந்த ஒருவனை யமன் கொண்டுபோகும் பொழுது ஆயிரக்கணக்கானவரும் உயிர் போவதைவிட அதிகம் துன்புறுகின்றனர். உயிர் போய் விட்டால் கூடத் தொல்லை இல்லை. அதைவிட அதிகம் துன்பம் தருவதாகும் இருந்துகொண்டு அல்லல் படுவது. ஐயோ, யமனே இந்த உண்மை தெரிகிறதில்லையே உனக்கு ! - > s SluLDTಿನ! நெடுமான் அஞ்சியை' நாம் அறிவோம். அவனுக்கு உற்ற நண்பர் ஒளவையார். அதியமான் இறந்த பொழுது பாட்டியார் வருந்திப் புலம்புகிறார். ஏனை யோர் போலப் பாட்டியாரும் அதியனின் பிரிவுக்கு வருந்தத் தொடங்கினார். தம்முடைய உயிர் நண்பனாகிய அதியன் போய்விட்ட மையின் தமக்கு ஏற்பட்ட பெருநட்டத்தை நினைத்துப் பாடத் தொடங்கினார். அதனையடுத்து அவனுடைய