பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 A மகளிர் வளர்த்த தமிழ் சிறந்த பண்பாடு நினைவிற்கு வந்தது. உடனே அவர் மனம் அப்பெரு மகனுடைய சாவு தமக்கு மட்டும் நட்டம் அன்று என்பதை உணர்த்திற்று. சாதாரண மனிதர் தம்முடைய நட்டத்தையே பெரி தெனக் கருதி வருந்துவர். கவிஞராகிய ஒளவையார் மனம் இச்சிறிய கூட்டிலிருந்து விடுபட்டுப் பரந்த உலகைக் காண்கிறது. ஒருவன் இறந்துவிட்டதால் எத்துணைப் பேருக்கு நட்டம் ஆ ! பாடிச் சென்று பரிசில் பெறு வதையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட பாணர் கூட்டம் இனி எங்கே செல்லும் அதியமான் மார்பில் வேல் பாய்ந்து இறந்தான். அவன் மார்பில் மட்டுமா அவ்வேல் பாய்ந்தது ? பாணர்கள் கையில் வைத்துள்ள பிச்சைப் பாத்திரத்திலும் அவ்வேல் தைத்ததாம் ; அப்பாத் திரத்தைத் தாங்கிய கையிலும் தைத்ததாம். அம்மட்டோ ? இரப்பவர்களை மட்டும் அவ்வேல் கொல்லவில்லை. அவன் சுற்றத்தார் கண்களில் உள்ள மணி போன்றவன். எனவே, அக்கண்மணியையும் தாக்கிற்று. அத்துடன் நிற்கவில்லை யாம் அப்பாழும் வேல் அழகிய சொல்லை ஆராய்ந்து பாடும் புலவர்கள் நாவிலும் சென்று தைத்ததாம் ! இத்துணைப் பேரையும் உயிர் வதை செய்தது அதியமான் மார்பில் தைத்த வேற்படை. இக்கருத்து, பாட்டியார் பாடலில் கிடைக்கிறது. 'அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுறீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்றுவீழ்ந் தன்றவன் அருநிறத்து இயங்கிய வேலே !’ (அ ரு ந் த ைல-பெரிய தலையையுடைய ; அகன் மண்டை-பெரிய தலையுமாம் : புரப்போர்-சுற்றத்தா அருநிறம்-அரிய மார்பு)