பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 57 அதியமான் சாவால் நாட்டுக்கு நேர்ந்த நட்டத்தை அடுத்த அடிகளிற் கூறுகிறார் பாட்டியார். - 'இனிப்பாடுநரும் இல்லை, பாடுநருக்கு ஒன்று ஈகுநரும் இல்லை!" என்பதே அவர் கண்ட அவல முடிவு. ஒருவன் உயிரைக் கவர்ந்த யமன் தமிழ் நாட்டில் ஒரு பெரும் பஞ்சத்தை உண்டாக்கி விட்டான் என்கிறார் பாட்டியார். ஐயோ, யமனே ! உன் அறிவும் நீயும் ! - 10. வெண்ணிக் குயத்தியார் சோல் வன்மை சொல்வன்மை என்பது அனைவருக்கும் வாய்க்கும் ஒன்றன்று. எத்துணைச் சிறந்த அறிவுடையாரும், சொல் வன்மை இன்றேல், அவர் தம் அறிவு விளக்கத்தைப் பிறர் அறிய இயலாமல் போய்விடும். ஆசிரியர் வள்ளுவர் இது. பற்றி ஒர் அதிகாரமே வகுக்கின்றார். "நா நலம்' என்று. கூறப்படும் இது. சொல்லுக்கு உள்ள பலவகை ஆற்றலையும் நன்கு அறிந்து, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற்வாறு தக்க சொல்லால் தன் கருத்தை வெளியிடுதலையே சொல் வன்மை என்று. பெரியோர் குறித்தனர். அதிலும், கவிதையில் சொல் வன்மையைக் காட்டுவது இன்னும் சிறப்புடையது. *சிறந்த சொற்களால், சிறந்த பொருளைச் சிறந்த முறையில் பாடுவதே கவிதை," என்பர் திறனாய்வாளர் (Gritics.) - - சில சந்தர்ப்பங்களில் ஒருவன் விரும்பாதவற்றைக் கூட அவன் எதிரே கூற வேண்டிய இன்றியமையாமை ஏற்படும். அவன் மனம் நோவாமல் கூறும் சிறப்பே சொல் வன்மையின் பாற்படும். வெண் ணிக் குயத்தியார்