பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 A மகளிர் வளர்த்த தமிழ் என்பவர் ஒரு பெண்பாற்புலவர் ; வெண்ணி என்ற ஊரில் குயவர் குடியிற் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் எது என்று அறிய முடியாதபடி குடிப்பெயரே அவருக்கு வழங்கிவிட்டது. அப்புலவர் பெருமாட்டியார் பாடிய பாடல்களுள் இன்று நமக்குக் கிடைப்பது ஒரே ஒரு பாடல் தான். இவ்வளவு சிறந்த பாடல் பாடப் பழைய அனுபவம் நிரம்பத் தேவை. எனவே, அவர் பல பாடல்கள் பாடியிருத்தல் வேண்டும். ஆனால், நம் முன்னோர்கள் கவனக் குறைவால் பல ஆயிரம் பாடல்கள் அழிந்தன வாதலின், அவற்றுள் அவருடையனவும் சில அழிந்திருத்தல் கூடும். தாம் பாடிய ஒரே பாடல் இன்று இருப்பவும், அப்புலவர் அதன் சிறப்பால் இலக்கிய உலகில் ஒரு சிறந்த இடம் பெற்று வாழ்கிறார். அவரால் பாடப்பெற்றவன் கரிகால் வளவன். சோழப் பேரரசர்களுள் சிறந்தவனாக மதிக்கப் பெறும் அவன் வெண்ணிப்பறந்தலை என்ற ஊரில் ேச ர மா ன் பெருஞ்சேரலாதன் என்ற சேர மன்னனுடன் பொருதான். கரிகாலன் வாழ்விலேயே இத்தகைய கடும்போர் நடைபெற்றதில்லை எனலாம். இருவரும் சிறந்த வீரர் இருவர் படைகளும் தமிழ்ப் படைகள். எனவே, வெற்றி தோல்விகள் காண முடியாத படி போர் நடைபெற்றது. இறுதியில் கரிகாலன் எறிந்த வேல் ஒன்று, சேரமான் மார்பில் குத்தி முதுகுப்புறம் வெளிப்பட்டு விட்டது. - - அந்நாளில் தமிழ் வீரர் தம் முதுகில் புண் படுதலை விரும்பார் : புறப்புண் என்ற பெயருடைய முதுகுப்புண் பெறுவதைவிடப் போர்க்களத்தில் தங்கி நின்று உயிரையே விடுவர். என்றாலும், சேரலாதன் முதுகில் புண்பட்டு விட்டது. புறமுதுகு காட்டி ஒடும் பொழுதுதானோ முதுகில் காயமேற்படும் ? எனவே, முதுகுப்புண்ணை, அது எக்காரணத்தால் ஏற்பட்டாலும், தமிழர் வெறுத்தனர்.