பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 59. சேரலாதன் மார்பிலேதான் வேல் பாய்ந்தது. எனினும், அது முது கை த் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டு விட்டதர்தலின், முதுகுப்புண் இருப்பதை விரும்பாத சேரன், அதனை வெறுத்தான். போரிலும் தோல்வியே கிட்டியது சேரனுக்கு. அதனால், இம்முதுகுப் புண்ணுடன் ஊர் திரும்ப விரும்பவில்லை சேரன். உடனே வடக்கு இருக்க உறுதி பூண்டுவிட்டான். தம் வாழ்நாளில் ஒரு பழி வந்து சூழ்ந்து விடுமே. யாயின், அதனைப் பொறுக்கலாற்றாத அந்நாளைய தமிழர், தற்கொலையும் புரியத் துணிவர். ஆனால், கருவி கொண்டு உயிரைப் போக்குவதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்றையும் மேற்கொண்டனர். அதாவது: தருப்பைப் புல்லை அடுக்கி, அதன்மேல் வடபுறம் நோக்கி அமர்ந்து, ஊண் உறக்கம் முதலியவற்றை நீக்கி, ஒரே சிந்தனையுடன் இருத்தலாகும். உணவு, நீர், உறக்கம் முதலியவை இன்மையின் ஊன் வாட, உடம்பு நைய, கொஞ்சம் கொஞ்சமாக், அங்குலம் அங்குலமாக உயிர் பிரிந்து செல்லும். இறுதியில் உயிர் போய்விடும். இவ் வாறு இருந்து உயிர் விடுதலையே வடக்கிருத்தல் என்பர். சேரமான் தன் முதுகுப் புண்ணிற்கு நாணி, வடக்கு இருக்க முடிவு செய்துவிட்டான். அவனுடைய நண்பர் களாகிய கழாஅத் தலையார், வெண்ணிக் குயத்தியார் போன்ற புலவ்ர் பலரும் அவனைத் தடுத்தும், அவன் தன் உறுதிப்பாட்டில் தளரவில்லை , வடக்கிருந்து உயிரையே விட்டு விட்டான். இது இவ்வாறாக, கரிகாலன் சேரனுடைய வீரத்தைப் போர்க் களத்திலும் கண்டான். தன் மேல் குற்றம் இல்லா மல் இருப்பவும், குற்றம் செய்தவனைப் போல நாணி வடக்கிருந்து உயிரையே விடும் உறுதி படைத்தவன் ஆயினான் சேரன். எனவே, சேரனுடைய அறவீரம், மறவீரம் என்ற இரண்டையும் நேரிற் பார்த்தவனாகிய