பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 A மகளிர் வளத்ர்த தமிழ் சோழன், அச்சேரன் மாட்டுப் பெருமதிப்புக் கொண்டிருத் தல் வேண்டும். அவ்வாறு கொள்ளாமல், அவனை மதிப்புக் குறைவாக நினைத்தனன் போலும்,! அரசர்க்கரசனாகிய கரிகாலனே இவ்வாறு பிழை செய்தால், யார் அவன் .பிழையை எடுத்துக்காட்டுவது ? - இந்நிலையில் கரிகாலன் இறந்துவிட்ட சேரனை நன்கு மதியாமல் இருக்கிறான் என்ற செய்தி வெண்ணிக்குயத்தி யாருக்கு எட்டிற்று. அவருடைய ஊரில் நடைபெற்ற போராதலின், அவர் நேரே கண்டிருந்தார் சேரன். வீரத்தை ; கரிகாலன் வெற்றி எக்களிப்பால் செய்யும் தவற்றை அவனுக்கு எடுத்துக்காட்ட விரும்பினார் ; அவனுக்கு நேரே, அவனிடம் சென்று தம் சொல் வன்மை அனைத்தையும் பயன்படுத்தி ஒரு கவிதையே புனைந்தார் ; கரிகாலனையும் புகழ்ந்தார் அப்பாடலில். ஆனால், சேரனையும் புகழ்ந்தார். அதே பாடலில். "குளிர்ந்த பெரிய கடலினிடத்துக் கப்பற்படையைச் செலுத்தி வெற்றி பெறுதற்காகத் தனக்கு மதம் கொண்ட பகையாய் இருந்த காற்றைக்கூடத் தனக்கு உதவியாகச் செய்துகொண்டு வெற்றி பெற்ற சோழன் மரபில் உ ள் ள வ ேன ! யானைப் படையையுடைய கரிகால் வளவனே போரில் எதிர் சென்று தாக்கி, ஆற்றலைப் புலப்படுத்தும் முறையில் வெற்றியையும் பெற்றவனே ! உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ, நிறைந்த புதிய வருவாயினையுடைய வெண்ணிப் பறந்தலையில் மிகுந்த புகழையுடைய தேவருலகத்தை அடைவான் வேண்டிப் புறப் புண்ணுக்கு வெட்கி வடக்கிருந்தவன் ? என்ற பொருளில் பாடினார் : 'நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக ! களிஇயல் யானைக் கரிகால் வளவ. : சென்று அமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற