பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. ಆ. ஞானசம்பந்தன் A 61. வென்றோய் ! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்குஇருந் தோனே?" - (புறம். 66): சோழன் ஒருவன் கடலில் வீசும் காற்றைக் கூடத் தனக்கு விருப்பமான முறையில் வீசுமாறு செய்தானாம். இதுவே முதலிரண்டு அடிகளில் கூறப்பெற்ற செய்தி. இதனை அப்புலவர் வேண்டுமென்றே குறிக்கிறார் என்று. நினைக்க வேண்டியுள்ளது. அதனால், க ரிகா ல ன் வெற்றியை அப்புலவர் பாராட்டாமல் விடவும் இல்லை. நின் ஆற்றல் தோன்ற வென்றோய் ! என்ற அடியால் கரிகாலனுடைய வீரத்திற். குரிய மதிப்பைத் தருகின்றார். ஆனால், வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் இவ்வுலகில், ஒருவன் ஏன் இவ்வளவு தூரம் தன்னைப் பற்றி உயர்வாக நினைத்து கொள்ள வேண்டும் ? தன்னைப்பற்றி வேண்டுமானால் எவ்வளவு உயர்வாக வேண்டுமானாலும் நினைந்துக் கொண்டு போகட்டும் ; ஆனால், பிறரைப்பற்றி மதிப்புக். குறைவாக நினைக்கலாமா ? அது பெருந் தவறு ஆயிற்றே ! இத்தகைய தவறான செயலைக் கரிகாலன் போன்ற பெருவீரர் செய்யலாமா ? இவ்வாதம் அம்மையார் மனத்தில் முகிழ்த்தது. எனவே, அவர், நின்னினும் நல்ல வன் அன்றே அவன்?' என்ற பெரிய குண்டைப் போடு கிறார். நல்லவன் என்று கூறப்படுவதற்கும், வீரன்’ என்று: கூறப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. கரிகாலனைக் காட்டிலும் சேரலாதனை வீரன் என்று புலவர் குறிப்பிட வில்லை என்பது கவனித்தற்குரியது. கரிகாலன் எவ்' வாறு வெற்றி பெற்றான் ? படை வீரரின் துணை கொண்டும், தன் தோள் வலிமை கொண்டும் வெற்றி