பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் வளர்த்த தமிழ் 1. பாரி மகளிர் வீட்டில் தொட் டி களி லும் கொல்லைகளிலும் செடிகள் வைத்து வளர்ப்பதுண்டா நீங்கள் ? குழந்தைகள் செடி வளர்க்கத் தொடங்கினால், முழு மூச்சுடன் கவனத்தை அதில் செலுத்துவதைக் காண்லாம். அந்தக் குழந்தைகளுள்ளும், பெண் குழ்ந்தைகள் அலாதியான இனம். ஆண் குழந்தைகள் செடி வளர்ப்பதற்கும் பெண் குழந்தைகள் வளர்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. தங்கள் பல வேலைகள் நடுவே இவ்வளர்ப்பையும் ஒரு தொழிலா கக் கொள்வார்கள் ஆண் குழந்தைகள். ஆனால், பெண் குழந்தைகளோ எனில், தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி இதில் ஈடுபடுவார்கள். செடி வளர்ப்பதே தங்கள் வாழ்நாளில் பெரிய அலுவல் என்று கருதி நடப்பவர்கள் போல, முழுக் கவனத்தையும் அதில் செலுத்துவார்கள். தாய் தனக்குக் குடிப்பதற்காகத் தந்த பாலையும் தேனையும் தான் வளர்க்கும் செடிக்கு ஊற்றி வளர்த்தாளாம் ஒரு பெண் நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப' (நற். 172) என வரும் பாடல் அடி இதனை அறிவிக்கின்றது. - இதனால், வளர்க்கும் செடிக்குப் பாலும் நெய்யும் ஊற்றும் அளவிற்குத் தங்களை மறந்து ஈடுபடக்கூடியவர் கள் பெண்கள் என்பதை அறியலாம். சாதாரணமாகச் செடி வளர்ப்பதில் மட்டும் பெண்கள் இவ்வாறு செய் கிறார்கள் என்றில்லை. கவிதையாகிய செடியையும் மகளிர்-1 - -