பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 A மகளிர் வளர்த்த தமிழ் பெற்றான். அந்த அளவுக்கு அது பாராட்ட்ற்குரியதே. ஆனால், அவனுடைய வெற்றி இரத்தம் தோய்ந்தது ; அதிலும் பல்லாயிரக்கணக்கானவருடைய குருதி தோய்ந் தது என்பதில் ஐயமில்லை. பலர் குருதியைத் தன்னுடைய வெற்றியின் பொருட்டு ஒட விடுபவனை நல்லவன் என்று எவ்வாறு குறிப்பது ? வீரன், மறமுடையவன், அஞ்சா நெஞ்சன் என்று எத்தனை பெயர்கள் வேண்டுமானாலுங் கூறலாம் ; ஆனால், நல்லவன் என்ற பெயரைக் கெர்டுக்க முடியாது ! - - பண்பாடு ஒன்று பற்றித்தான் நல்லவன் என்ற பெயரை எடுத்தல் கூடும். தன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதன் பொருட்டு ஆயிரக் கணக்கானவரைப் பலியிடும் ஒருவன்ைப் பண்பாடுடைய வன் என்று கூறல் இயலுமா ? இயலாது. எனவே, புலவர் இருவரிடத்தும் உள்ள இயல்புகள்ை எடை போடுகிறார். "உன்பால் வெற்றி உள்ளது; சேரன்பால் பண்பாடுள்ளது.' என்கிறார். - - இதனை வலியுறுத்துவார் போல வளி தொழிலாண்ட உரவோன் மருக' என்றும் குறிப்பிடுகிறார். போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயற்கையினைக் கூடக் கட்டுப்படுத்த முயன்றனன் சோழன் முன்னோன் ஒருவன். அது சிறந்த செயலாயினும், தன்னலத்தைக் கருதியது என்பதை யாரே மறுக்க வல்லார் ? தன்னுடைய வெற்றியையே பெரிதாகக் கருதி, அதன் பொருட்டுக் காற்றைத் திசை மாறி வீசச் செய்தவன் மரபில் வந்த வனை 'வீரனே' என்று புகழ்தல் பொருத்தமே ! ஆனால், நல்லவன் என்று பெயர் பெற யாது செய்தான் அவன் ? பிறனுடைய நற்பண்பைக் கூட அறிய மாட்டாமல் அவனைத் தவறாக நினைத்தவனை எவ்வாறு பண்புடைய வன் எனக் கூறுவது ? இதன் மறுதலையாகச் சேரனை எடுத்துக் கெர்ள் வோம். அவன் கடமை என்ற முறையில் போரிட்டர்ன்.