பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 63 போரில் வெற்றி கிட்டவில்லை. அது அவனுடைய வீரத் தில் குறைவு ஏற்படுத்தலாம். ஆனால், மானம் போகிற சூழ்நிலை என்று தான் கருதிய ஒரிடத்தில் உயிரைப் பெரி தென அவன் மதிக்கவில்லை. பல வகைகளில் அப் புண்ணுக்கு அமைதி கூறலாம். அவன் புறப்புண்ணைப் பழி கூறுவார் யாரும் இலர். ஆனாலும், நாணமடைந்தான் சேரன். நாணத்தால் தன் உயிரை- கரிகாலனும் போக்க முடியாத தன் உயிரைதானே போக்கிக் கொண்டான். இன்னும் கூறப்போனால், போர்க்களத்தில் உயிரை விடுவதைக் காட்டிலும், வடக் கிருந்து உயிரைவிட அதிக வீரம் வேண்டும். நாணம் பெரி தெனக் கருதியமையின், அவனைச் சோழனைக் காட்டிலும் நல்லவன் என்று கூறிவிட்டார் வெண்ணிக்குயத்தியார். போரில் வென்றவனையே பெரிதும் பாராட்டிப் புகழ் பாடும் இவ்வுலகில், தோற்றவன் பெருமையைப் பாடின. பெருமை ஒரு பெண் புலவரையே சாரும். அதிலும் வென்றவன் எதிரே சென்று, தோற்றவன் பெருமையைப் பாடினார். இதிலும், இருவரையும் ஒப்பிட்டுப் பாடினார்; அதிலும், தோற்றவன் வென்றவனைக் காட்டிலும் மிக நல்லவன் என்று பாடினார். ஆம் ! இத்தகைய முறையில் கரிகாலனுக்கு அறிவு கொளுத்தியவர் வேறு யாரும் இலர் அதிலும் அப் பெருமை வெண்ணிக் குயத்தியாருக்கே தகும். யாருக்கும் பயன்படாமல் வீணாகின்ற மண்ணை எடுத்து, அனை வருக்கும் பயன் படக்கூடிய பாண்டங்களாகச் செய்யும் பண்புடைய குடியிற் பிறந்த பெருமாட்டியார் அல்லரோ அவர் ? எனவே, அகங்க்ாரத்தால் அழியும் நிலைக்கு வந்து விட்ட சிறந்த வீரனாகிய கரிகாலனுக்குத் தம் ஒப்பற்ற சொல் வன்மையினால் நல்லறிவு உண்டாகுமாறு செய்த பெருமை வெண்ணிக் குயத்தியாருக்கே உரியது.: