பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 A மகளிர் வளர்த்த தமிழ் வெண்ணிப் பறந்தலையில் நடந்த போர்தானே கரிகாலனைக் கர்வங் கொள்ளச் செய்தது ? அம்மண்ணி லேயே பிறந்த வெண்ணிக்குயத்தியார் அவனுக்கு நல்லறிவு புகட்டினார். அவனுக்குக் கர்வத்தைத் தந்த அவ்வூர் மண், அக்கர்வத்தைப் போக்கும் மருந்தாம் அம்மையாரை யும் தந்து புகழ் பெற்றது. - 11. வெள்ளி விதியார் சங்க காாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களுள் வெள்ளிவீதியாரும் ஒருவர். இன்று நம் காதுகட்கு இனிக் 'காத பேய் மகள் இளவெயினி” போன்ற பல பெயர்கள் வைக்கப் பெற்ற அந்தக் காலத்தில், இவ்வளவு அழகான பெயரைப் பெற்றிருந்த அப்பெருமாட்டியார்,பதின்மூன்று பாடல்கள் பாடியுள்ளார். r - அனைவரும் அறியும் ஒளவைப் பிராட்டியாருக்கும் காலத்தால் முற்பட்டவர் அவர். ஒளவையார் பாடிய அகப்பாடல் ஒன்றில் வெள்ளி வீதியாரைக் குறிக்கின்றார். 'அறு கோட்டு உழைமான் ஆண்குரல் ஆர்க்கும், நெறிபடு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவயர்ந் திசினால் யானே’ (அகம். 147) என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். அறுக்கப்பட்டவை போல உள்ள கொம்புகளை உடைய பெண் மான், தன்னுடைய ஆண் மானின் குரலைக் கேட்கக் காதுகளைத் திருப்பிக் கவனிக்கின்ற கவர்த்த வழி க ளி ல், வெள்ளிவீதி யைப் போல யானும் நீண்ட தூரம் சென்றதுண்டு," என்று ஒளவையாரே குறிப்பிட்டிருக்கிறார் என்பது அறிதற்குரியது. பல காலம் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்த அவர், பல பாடல்களையும் பாடியிருத்தல் கூடும். ஆனால், எந்த மன்னனுடைய காலத்தில் வாழ்ந்தார் என்று கூட அறிய