பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் . 65 முடியவில்லை. அவர் பாடின புறப் பாடல்களுள் ஒன்றும் இன்று கிடைக்கவில்லையாகவின். ஆனால், அகத்துறைப் பாடல்கள் பதின்மூன்று அவர் பாடியவையாக இன்று கிடைத்துள்ளன. அவை அகநானூற்றில் இரண்டும், குறுந்தொகையில் எட்டும், நற்றினையில் மூன்றுமாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. காதல் சுவை பற்றிப் பெரும்பாலும் ஆண் மக்களே பாடிய பாடல்களைக் காண முடிகிறது. சில சந்தர்ப்பங் களில்தான் பெண்பாற்புலவர்களுடைய பாடல்கள் மூலம் இச்சுவையைப் பற்றி அறிய முடிகிறது. அவ்வாறு இன்பச் சுவையைப் பற்றிப் பாடிய புலவர்களுள் வெள்ளி வீதியா ரும் ஒருவர். தாம் ஒரு பெண்ணாயும் புலவராயும் இருந்து பாடியுள்ளமையின், பெண்டிர் மனநிலையை அறிய் அவர் பாடல்கள் மிகவும் உதவுகின்றன. தலைவனைப் பிரிந்து நிற்கும் தலைவியின் உடம்பில், பசலை நோய் என்ற ஒன்று பரவி விடுமாம். உடம்பில் உள்ள ஒளி மறைந்து விடுவதைத்தான் இவ்வாறு அந் நாளில் குறிப்பிட்டனர் போலும் ! கவிஞர்கள் தம்மைத் தலைவியாகப்பாவித்துக் கொண்டு பாடிய பாடல்களி லும், இப்பசலை மிகுதியாகப் பேசப்படுகிறது. தம் முடைய அழகைக் கெடுக்கிறது என்றும், தம் காதல் நோயைப் பிறர் அறிந்து கொள்ள ஏதுவாக உள்ள தென்றுந்தான் கவிஞர்கள் பாடலில் கூறுவர். ஆனால், வெள்ளி வீதியார் பெண்ணாதலின், வேறு விதமாக இதனைப் பேசுகிறார். * - - - - நல்ல பசுமர்ட்டின் பால் எவ்வாறு பயன்பட வேண்டும் ? தூய்மையான பாத்திரத்தில் கறக்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லையானால், அம்மாட்டின் கன்று அப்பாலை உண்ணவேண்டும். கலத்தில் கறக்கப் பட்டால் மக்கட்குப் பயன்படும். கன்று குடித்து மகிழ்ந் . . ip&gffr—5. .