பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 A மகளிர் வளர்த்த தமிழ் தால், அது செழிப்பாக வளர ஏதுவாகும். இரண்டும் இல்லாமல், அப்பசுவின் பால் நிலத்தில் முற்றும் சிந்தி விட்டால், அது எவ்வளவு வருந்தத்தக்க செயல் : - அதே போல, தலைவியிடம் அழகு என்ற ஒன்று குடிபுகுந்துள்ளது. அந்த அழகு அவளிடம் இருந்தால் அவளுக்கு இன்பம் பயக்கும். இல்லாவிடில், அவளுடைய தலைவன் அதனை அனுபவிக்க வேண்டும். அவனுக்குப் பயன் படுவதே முதலாவது சிறப்பு. அது இயலவில்லையா யின், அவளுக்காவது பயன்பட வேண்டும். • . அழகு படைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே இவை இரண்டில் ஒன்று நிறைவேற வேண்டும் என்பது தானே ! ஆனால், இரண்டும் நிறைவேறாமல் மூன்றாவது ஒன்று நடைபெற்றால், அதைப்பற்றி என்னவென்று கூறுவது பாத்திரத்தில் கறக்கப்படாமலும், கன்று உண்ணாமலும், பால் நிலத்தில் வீணே ஆளற்றப்பட்டது போல, தலைவியின் அழகைத் தலைவன் பயன்படுத்தாமல் இருக்க, மூன்றாவது ஒன்று அவளுடைய அழகை வீணாகக் செய்கிறது. அது யாது ? அதுவே பசலை நோய் என்ப தாகும். இதோ வெள்ளி வீதியார் பாடுகிறார் : 'கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துஉக் கா.அங்கு எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது பசலை உணி இயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே! (குறுந் 27) (நல் ஆன்-நல்ல பசு ; உக்காங்கு-கொட்டியது போல என்னைக்கும்-என் தலைவனுக்கும் ; மாமைக் கவினே-மாமையாகிய அழகு) - தலைவியின் உள்ளத்தைத் திறந்து காட்டும் முறையில் அமைந்துள்ளது இப்பாடல். தலைவன் களவொழுக்கத்தில் வந்துகொண்டிருந்தவன், திடீரென்று வருவதை நிறுத்தி