பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 67 விட்டான். அவன் வரவை நினைத்து நினைத்து வருந்திய தலைவிக்கு இப்பொழுது உணவு மறுத்து உறக்கமும் கெட்டது. இவை இரண்டும் கெட்டவுடன் உடலிலுள்ள அழகும் கெட்டுப் பசலை நிறம் படர்ந்து விடுகிறது. இந்நிலையில் தலைவன் வாராது விட்ட கொடுமை யைப் பற்றித் தலைவி பாடியிருப்பினும் குறை கூறுவதற் கில்லை. உண்மையில் அவன் செய்தது தவறு தான் ! என்றாலும், தமிழ் நாட்டுப் பெண்கள் தம்முடைய தவக் குறைவை எடுத்துப் பேசுவரே தவிர, தலைவன் குறையை எடுத்துப் பேசுவதில்லை, அந்த நாட்களில் 1 இங்கே வெள்ளி வீதியார் தம்முடைய கவலையை எவ்வளவு அழகாக வெளியிடுகிறார் ! தம்முடைய உடம்பு கெடுவது பற்றியும், அழகு அழிவது பற்றியும் ஒன்றும் கவலை இல்லை. ஆனால், அந்த அழகு பயன்பட வேண்டியவர்கட்குப் பயன்பட்டு, அதனால் அழிவதானால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆண்டவனால் படைக்கப் பட்ட அழகு, இவ்வாறு பசலையால் உண்ணப்பட்டு அழிய வேண்டுமா?’ என்று கேட்கும் பொழுது அவருடைய வருத்தத்தின் ஆழத்தை ஒருவாறு அறிய முடிகிறது. எல்லையற்ற துயரத்தில் ஆழ்ந்துள்ளாள் தலைவி என்பது, பாட்டைப் படித்தவுடன் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மனநிலையில், தலைவன் மேல் குறை கூறினாலும் யாரும் அதில் தவறு காணமாட்டார்கள். இருந்தாலும்,பண்பாடு.நிறைந்த அத்தலைவியின் உள்ளம் யார் பேரிலும் தவறு காண மறுக்கிறது ! இதே போன்ற ஒரு மன நிலையை நம் காலக் கவிஞ. ரான பாரதியார் பாடுகிறார் : நல்லதோர் விணைசெய்தே- அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ? சொல்லடி சிவசக்தி ! - என்னைச் - சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் !’