பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 A மகளிர் வளர்த்த தமிழ் என்று கவிஞர் தம் மன வருத்தத்தை வெளியிடுகிறார். “சுடர் மிகும் அ றி வு ட ன் படைக்கப்பெற்ற யான், அவ்வறிவின் பயனை எனக்கும் பிறருக்கும் பயன்படுத்த வேண்டாவா ? நல்ல வீணையைச் செய்தால், அதில் இசையை எழுப்பி மக்களை மகிழ்விக்க வேண்டாவா ? அவ்வீணையைப் புழுதியில் எறிவது எவ்வளவு அறியாமை யுடையது . அதைப் புழுதியில் எறிவது எவ்வளவு தவறுடையதோ, அவ்வளவு தவறுடையதன்றோ நல்ல் அறிவைப் பயன்படுத்தாமல் வீணாகச் செய்வது ? வெள்ளி வீதியார், நல்ல பசும்பால் நிலத்தில் கொட்டப்பட்டதுபோல, என் அழகைப் பசலை நோய் உண்கிறதே !’ என்று கூறுவதற்கும் பாரதியார், நல்ல வீணை புழுதியில் எறியப்பட்டது போல என் சுடர் மிகும் அறிவு வீணாகப் போகிறதே! என்று கூறுவதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. ஆனால், ஆடவராகலின், கவிஞர் அறிவு வீணாகப் போவதற்கு இறைவியை ஒரளவு குற்றவாளியாக்குகிறார். வெள்ளி வீதியார் பெண்ணா கலின், தம் அழகு கெடுவதற்குத் தலைவனைக் காரணமாக் காமல், தம் நிலையை மட்டும் கூறி வருந்துகிறார். அழகைப் பசலை நோய் உண்கிறது பற்றித் தோன்றிய வருத்தம், தீரும் வழியாக இல்லை. எப்பொழுது அவ் வருத்தம் தீரும் ? எப்பொழுது தலைவன் வருகிறானோ, அப்பொழுதுதான் பசலை நோய் போகும். தலைவன் முகமாகிய கதிரவனைக் கண்ட உடன் பசலையாகிய இருள் தானே நீங்கிவிடும். ஆனால், கதிரவன் உதயம் ஆகும் பொழுதுதான் உண்டாகுமே தவிர, நாம் விரும்பும் பொழுது உண்டாவதல்லவே எனவே, தலைவனும் வந்த பாடில்லை ; தலைவியின் துயரும் தீர்ந்தபாடில்லை. நாட்கள் ஒடி மறைகின்றன. எத்தனையோ முறை சந்திரன் வளர்ந்து தேய்ந்துவிட்டான். ஒவ்வொரு முறையும் சந்திரனைக் காணும் பொழுதெல்லாம்,